ADDED : செப் 23, 2025 04:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஆயுஷ் மருந்து பாதுகாப்பு, கண்காணிப்பு துறை சார்பில் தேசிய மருந்து பாதுகாப்பு வார விழிப்புணர்வு கூட்டம் பண்ணை மருந்தியல் கல்லுாரியில் நடந்தது.
பண்ணை மருந்தியல் கல்லுாரி சேர்மன் பண்ணை கார்த்திகேயன் தலைமை வகித்தார். மாவட்ட சித்த மருத்துவ, ஆயுஷ் மருந்து கண்காணிப்பாளர் சிவகுமார்,ஒருங்கிணைப்பாளர் ஜெயச்சந்திரன், இளநிலை ஆராய்ச்சியாளர் பாலமுருகன், விளக்கம் திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லுாரி பேராசிரியை முருகலட்சுமி பேசினர் . பண்ணை பாரத் நிவாஸ் துணை சேர்மன் ஸ்ரீனிவாஸ் நிரஞ்சன், முதல்வர் கணேசன், பேராசிரியர் எத்திராஜ், சாம் புஷ்பராஜ் கலந்து கொண்டனர்.