/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இனி மதுரைக்கு போக வேண்டாம்... திண்டுக்கல்லில் வருது கூடுதல் மருத்துவ வசதி
/
இனி மதுரைக்கு போக வேண்டாம்... திண்டுக்கல்லில் வருது கூடுதல் மருத்துவ வசதி
இனி மதுரைக்கு போக வேண்டாம்... திண்டுக்கல்லில் வருது கூடுதல் மருத்துவ வசதி
இனி மதுரைக்கு போக வேண்டாம்... திண்டுக்கல்லில் வருது கூடுதல் மருத்துவ வசதி
ADDED : ஏப் 05, 2024 05:31 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் அகச்சுரப்பியல், குடல்,வயிறு, இரைப்பை, இதய, நெஞ்சக உள்ளிட்ட பல்வேறு அறுவை சிகிச்சை பிரிவுகளுக்காக புதிதாக 8 மாடி கட்டடம் அமைக்க திட்ட மதிப்பீடு தயாரித்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பபட்டுள்ளது.
இத்திட்டம் பயன்பாட்டிற்கு வந்ததும் நோயாளிகள் மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனை செல்லும் நிலை ஏற்படாது.
திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு திண்டுக்கல்,தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து ஏராளமான நோயாளிகள் வருகின்றனர்.
நோயாளிகளின் தேவைகள் அதிகரிப்பதால் அரசு தரப்பில் 2023ல் 500 படுக்கை வசதிகளுடன் புதிதாக அரசு மருத்துவமனை கட்டடம் கட்டப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது. இதனால் இங்கு தினமும் நோயாளிகள் வந்து செல்வது அதிகரிக்கிறது . பல்வேறு சிகிச்சைகளும் நோயாளிகளுக்கு செய்யப்பட்ட நிலையில் இங்கு அகச்சுரப்பியில், குடல், வயிறு, இரைப்பை, இதயம், நெஞ்சக அறுவை சிகிச்சை, சிறுநீரக அறுவை சிகிச்சை பிரிவு,ரத்த குழாய் அறுவை சிகிச்சை பிரிவு,கேன்சர் பிரிவு,நுண் கதிர் அறுவை சிகிச்சை பிரிவு உள்ளிட்ட பல்வேறு பிரிவுகள் இல்லாமல் உள்ளது.
இது தொடர்புடைய நோயாளிகள் சிகிச்சைக்கு வரும் நிலையில் அதற்கான வசதிகள் இல்லாததால் மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பபடுகிறார்கள். இதனால் பலரும் அலைக்கழிக்கப்பட மருத்துவமனை நிர்வாகத்தை வசைபாடுகின்றனர்.
இந்நிலையில் திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் என்னென்ன பிரிவுகள் இல்லையோ அவற்றையெல்லாம் உருவாக்கும் வகையில், மருத்துவமனை வளாக பழைய கட்டடங்களை அகற்றி அதே இடத்தில் புதிதாக 8 மாடி கட்டடம் அமைக்க மருத்துவமனை நிர்வாகத்தினர் திட்ட மதிப்பீடு தயார் செய்து அரசின் ஒப்புதலுக்கு அனுப்பி உள்ளனர். இது செயல்பாட்டுக்கு வரும்போது மதுரை அரசு மருத்துவமனைக்கு நோயாளிகள் செல்வது தடுக்கப்படும் என மருத்துவமனை நிர்வாகத்தினர் தெரிவித்தனர்.

