/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தி.மு.க., கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
/
தி.மு.க., கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டம்
ADDED : டிச 25, 2025 06:25 AM

திண்டுக்கல்: 100 நாள் வேலைத் திட்டத்தில் மத்திய அரசு மாற்றங்கள் செய்ததை கண்டித்து தி.மு.க., கூட்டணி கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்லில் உழவர் சந்தை அருகில் தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலாளர் நெடுஞ்செழியன் தலைமையிலும், பழநி ரோடு பைபாஸ் அருகில் தெற்கு ஒன்றிய செயலாளர் வெள்ளிமலை தலைமையிலும், பொன்னகரம் அருகில் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஜெயராமன் தலைமையிலும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநகர செயலாளர் ராஜப்பா வரவேற்றார். மாவட்ட செயலாளர் எம்.எல்.ஏ., செந்தில்குமார் பேசினார். எம்.பி., சச்சிதானந்தம், மேயர் இளமதி மார்க்சிஸ்ட் மாவட்ட செயலாளர் பிரபாகரன், இ.கம்யூ., மாவட்ட செயலாளர் மணிகண்டன், காங்., மாநகர தலைவர் மணிகண்டன், ம.தி.மு.க., மாவட்ட செயலாளர் செல்வராகவன், வி.சி.க., நிர்வாகி அன்பரசு, கலந்து கொண்டனர்.
வேடசந்துார் : பாலப்பட்டி ஊராட்சி அழகாபுரியில் தி.மு.க., வடக்கு ஒன்றிய செயலாளர் கவிதா தலைமை வகித்தார். மாவட்ட மாணவரணி அமைப்பாளர் தினேஷ்முத்துக்கிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.
முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் முத்துக்கிருஷ்ணன், அய்யாவு, அமிர்த கணேசன், மார்க்சிஸ்ட் நிர்வாகிகள் பெரியசாமி, பாலச்சந்தர், முருகேசன், காங்., நிர்வாகிகள் பகவான், கண்ணன், மயில்சாமி, தி.மு.க.,நிர்வாகிகள் ஆசைத்தம்பி, செல்வம், சிவசாமி, ஆறுமுகம், தண்டபாணி, வரதராஜ், பாலு, பொன்ராம், செல்வராஜ், திலகவதி, மழுக்கையா, வழக்கறிஞர்கள் கனகராஜ், விஜயராஜ் பங்கேற்றனர்.
வடமதுரை : தென்னம்பட்டியில் தி.மு.க., ஒன்றிய செயலாளர் சுப்பையன் தலைமை வகித்தார். மாவட்ட நிர்வாகிகள் இளங்கோ, சொக்கலிங்கம், நகர செயலாளர் கணேசன், கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் பங்கேற்றனர்.

