/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இனிதே நிறைவுற்றது திண்டுக்கல் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி
/
இனிதே நிறைவுற்றது திண்டுக்கல் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி
இனிதே நிறைவுற்றது திண்டுக்கல் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி
இனிதே நிறைவுற்றது திண்டுக்கல் தினமலர் வழிகாட்டி நிகழ்ச்சி
ADDED : ஏப் 06, 2025 07:41 AM

தமிழக திட்ட கமிஷன் உறுப்பினர் செயலர் சுதா ஐ.எப்.எஸ்., பேசியதாவது: பிளஸ் 2விற்கு பின் உயர் கல்வி என்றாலே மருத்துவம், பொறியியல் என்ற நிலை தற்போது மாறி பல்வேறு பிரத்யேக பிரிவு படிப்புகள் வந்து விட்டன. மருத்துவம், பொறியியல், கலை, அறிவியல், வணிகவியல் என பாடத்தை தாண்டி கூடுதல் திறமைகளை வளர்த்துக்கொள்ள வேண்டும்.
தற்போது அனைத்து படிப்புகளிலும் ஏ.ஐ., அப்ளிகேஷன்ஸ் பயன்பாடு வந்து விட்டது. தற்போது 'தொழில் புரட்சி 4.0' என்றாலும் அதற்கு அடுத்த நிலையில் உள்ள 'தொழில்புரட்சி 5.0' குறித்து விவாதிக்க துவங்கி விட்டோம். எனவே தொழில் நிறுவனங்கள் எதிர்பார்க்கும் திறமைகளை வளர்க்க வேண்டியது கட்டாயம்.
சிவில் சர்வீஸ் தேர்வு குறித்த இலக்கு உங்களுக்கு இருந்தால், கல்லுாரி முதலாமாண்டில் இருந்தே தயாராகுங்கள். அதற்கு நாளிதழ்கள் படிப்பது மிக முக்கியம்.
உங்கள் கல்வித்தகுதி, கூடுதல் திறன்கள், சாதனைகள், தனித்துவம், சாப்ட்வேர் திறன், அனுபவம் உள்ளிட்ட விபரங்களை (ரெஸ்யூம்) தயாரித்துக் கொள்ளுங்கள். அந்த விவரங்கள் உங்கள் அடையாளமாக இருக்க வேண்டும். படிப்பு என்பது தொடர்ச்சியான செயலாக இருக்க வேண்டும். அப்போது தான் ஜெயிக்க முடியும். உங்களை அப்டேட் செய்துகொண்டே இருங்கள்.
கல்லுாரியில் படிக்கும் போது புதுமை பெண், நான் முதல்வன் திட்டங்கள், ஆராய்ச்சி படிப்பு நிலையில் 'சி.எம். ரிசர்ச் பெல்லோஷிப்' திட்டத்தையும் பயன்படுத்திக்கொள்ளுங்கள். ஏதாவது ஒரு வெளிநாட்டு மொழியை கற்றுக்கொள்ளுங்கள்.

