ADDED : நவ 27, 2024 04:24 AM
அ நிறம் | அளவு
திண்டுக்கல்,: பஞ்சம்பட்டி,கொசவபட்டி,செம்மடைப்பட்டி ஓடை உள்ளிட்ட பகுதிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றாமல் காலம் தாழ்த்தி வரும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வீடு இல்லாத அனைவருக்கும் வீட்டு மனை வழங்கி அரசு வீடு கட்டித்தர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கம்யூ., சார்பில் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகம் அருகில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
மாநிலக்குழு உறுப்பினர் சுப்புராமன், ஜீவிதா, சேசுராஜ், தண்டபாணி, ராஜா, அனைத்திந்திய நீதிக்கான வழக்கறிஞர் சங்கம் ரவிக்குமார்,ஏ.ஐ.சி.சி.டி.யு.செயற்குழு உறுப்பினர் ரவி பங்கேற்றனர்.
