/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சேதமாகும் சர்வீஸ் ரோடுகள்.. விளக்குகள் இன்றி இருள்
/
சேதமாகும் சர்வீஸ் ரோடுகள்.. விளக்குகள் இன்றி இருள்
சேதமாகும் சர்வீஸ் ரோடுகள்.. விளக்குகள் இன்றி இருள்
சேதமாகும் சர்வீஸ் ரோடுகள்.. விளக்குகள் இன்றி இருள்
ADDED : செப் 23, 2025 04:38 AM

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் பைபாஸ் ரோட்டில் இருந்து தாராபுரம் வழித்தடத்திற்கு செல்லும் சர்வீஸ் ரோடு, தாராபுரம் வழித்தடத்தில் இருந்து பைபாஸ் ரோட்டுக்கு செல்லும் சர்வீஸ் ரோடு அடிக்கடி சேதம் அடைதாலும், பல இடங்களில் மின்விளக்கு வசதி இல்லாததாலும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனர்.
ஒட்டன்சத்திரம் புதிய பைபாஸ் ரோடு லெக்கையன் கோட்டைக்கும் அரசபிள்ளைபட்டிக்கும் இடையே முதலில் அமைக்கப்பட்டது.
தற்போது காவேரியம்மாபட்டி வழியாக பொள்ளாச்சி வரை புதிதாக அமைக்கப்பட்டு உள்ளது.
திண்டுக்கல்- - பழநி ரோட்டில் ஒட்டன்சத்திரத்திற்கு முன்பாக லெக்கையன்கோட்டையில் இருந்து அத்திக்கோம்பை, காளாஞ்சிபட்டி, கொல்லப்பட்டி, குறிஞ்சி நகர் வழியாக பைபாஸ் ரோடு செல்கிறது.
இரண்டு ரயில்வே மேம்பாலங்கள், தாராபுரம், வேடசந்தூர் ரோடுகளில் மேம்பாலங்களுடன் அமைக்கப்பட்ட இந்த ரோட்டில் போக்குவரத்து துவங்கியதில் விபத்துக்கள் பல நடந்து வருகின்றன.
இவற்றில் டூவீலர் விபத்துக்களில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை அதிகம். ரோட்டின் எதிர்ப்பகுதியில் உள்ள கிராமங்களை சென்றடைய போதிய வசதிகள் செய்யப்படாததே இதற்கு காரணமாகிறது.
தாராபுரம் வழித்தடத்திற்கு செல்லும் சர்வீஸ் ரோடு அடிக்கடி சேதமடைகிறது. பழனிகவுண்டன் புதுாரில் இருந்து குறிஞ்சி நகர் செல்லும் சர்வீஸ் ரோட்டில் பொது மக்கள் நடமாட்டம், டூவீலர் போக்குவரத்தும் அதிகம் உள்ளது.
இப்பகுதியில் மின்விளக்கு வசதி இல்லாததால் இரவு நேரத்தில் இருளில் மூழ்குகிறது.
இதனால் பொதுமக்கள் இந்த வழியில் செல்வதற்கு அச்சப்படுகின்றனர். இருளை பயன்படுத்தி குற்ற சம்பவங்களும் அதிகரித்து வருகிறது.