/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சேதமான சாலை, குடியிருப்புகள்; தவிப்பில் கோபால்பட்டி மக்கள்
/
சேதமான சாலை, குடியிருப்புகள்; தவிப்பில் கோபால்பட்டி மக்கள்
சேதமான சாலை, குடியிருப்புகள்; தவிப்பில் கோபால்பட்டி மக்கள்
சேதமான சாலை, குடியிருப்புகள்; தவிப்பில் கோபால்பட்டி மக்கள்
ADDED : செப் 09, 2025 04:37 AM

நத்தம்: சேதமான சாலைகள், காளியம்மன் கோயில் தெருவில் உள்ள சேதமடைந்த அரசு குடியிருப்பு, மின் விளக்கு அமைக்காதது, சாலை தடுப்புகளில் போதுமான பாதுகாப்பு நடவடிக்கைகள் இல்லாததால் தொடர் விபத்து என வேம்பார்ப்பட்டி ஊராட்சி மக்கள் பரிதவிக்கின்றனர்.
வேம்பார்பட்டி ஊராட்சி கோபால்பட்டியில் புதிதாக சாலை அமைக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வந்து 2 ஆண்டுகளுக்கு மேலான நிலையில் போதுமான மின்விளக்குகள இல்லாததால் தொடர் விபத்துக்கள் நடந்து வருகிறது.
இதை தடுக்க சாலையில் போதிய பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்த நெஞ்சாலை துறை முன் வர வேண்டும்.
தற்போது டோல்கேட்டை பயன் பாட்டிற்கு கொண்டு வரு வதற்கான வேலைகள் நடந்து வருகிறது.சாலையில் பாதுகாப்பு அம்சங்கள் முறையாக மேற்கொள்ளாமல் டோல் கேட் திறக்கும் பணி நடந்து வருவதால் அப்பகுதி மக்கள் கவலை அடைந்து வருகின்றனர்.
வேம்பார்பட்டி ஊராட்சி காளியம்மன் கோயில் தெருவில் 25 ஆண்டுகளுக்கு முன்னர் கட்டப்பட்ட 35க்கு மேற்பட்ட தொகுப்பு வீடுகள் உள்ளன. அனைத்து வீடுகளின் கூரை சிமென்ட் பூச்சு பெயர்ந்து கம்பிகள் ஆபத்தான நிலையில் தொங்குகிறது.
பெரும்பாலான வீடுகளின் சுவர் சேதமடைந்து நிலையில் மக்கள் தொடர்ந்து வசித்து வருகின்றனர். கூரை அடிக்கடி பெயர்ந்து விழுவதால் மக்கள் அச்சத்தில் உள்ளனர்.
மொட்டையாகவுண்டன்பட்டி செல்லும் ரோடு, செடிப்பட்டி செல்லும் ரோடு, வேம்பார்பட்டியில் இருந்து கன்னியாபுரம் செல்லும் ரோடு என ஊராட்சிக்கு கட்டுப்பட்ட கிராம ரோடுகள் சேதமடைந்துள்ளன.
ஆக்கிரமிப்பில் நடைபாதை சி.ஆர்.ஹரிஹரன், அ.தி.மு.க., மாவட்ட வர்த்தக அணி பொருளாளர், வேம்பார்பட்டி: கோபால்பட்டியில் விரிவுபடுத்தப்பட்ட சாலை செயல்பாட்டுக்கு வந்து 2 ஆண்டுகளிலே சேதமடைந்து பள்ளம் மோடாக மாறி உள்ளது.
சேதமான இடங்களில் ஆங்காங்கே ஒட்டு போடும் வேலையையும் செய்து வருகின்றனர்.பாதயாத்திரை பக்தர்களுக்காக போடப்பட்ட நடைபாதை பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. சில இடங்களில் பேவர் பிளாக்கற்கள் சேதமடைந்துள்ளன.
சீரமைக்க வேண்டும் சோ.ஆனந்த கிருஷ்ணன், பா.ஜ., ஐ.டி., பிரிவு மாநில துணைத்தலைவர், வேம்பார்பட்டி: வேம்பார்பட்டி ஊராட்சி காளியம்மன் கோயில் தெருவில் உள்ள குடியிருப்பு சேதமடைந்து மக்கள் வாழ தகுதியற்ற நிலையில் உள்ளது. 35க்கு மேற்பட்ட குடியிருப்புகளின் சிமென்ட் கூரை பெயர்ந்து விழும் நிலையில் குடியிருப்புகளில் மக்கள் தொடர்ந்து வசித்து வரு கின்றனர். இதை சீரமைத்து தர அரசு முன் வர வேண்டும்.
நடவடிக்கை எடுங்க ஏ.ரமேஷ், ஊராட்சி முன்னாள் உறுப்பினர், பாப்பம்பட்டி: வேம்பார்பட்டி ஊராட்சி உட்பட்ட வேம்பார்பட்டியில் இருந்து மொட்டையாகவுண்டன்பட்டி செல்லும் ரோடு, கோபால்பட்டியில் இருந்து செடிப்பட்டி கிராமத்திற்கு செல்லும் ரோடு, வேம்பார்பட்டியில் இருந்து கன்னியாபுரம் செல்லும் ரோடுகள் ஜல்லி கற்கள் பெயர்ந்து குண்டும் குழியுமாக உள்ளன.
வாகனங்கள் செல்ல தகுதியற்ற நிலையில் உள்ள இந்த ரோடுகளில் பயணிக்கும் பள்ளி மாணவர்கள், கர்ப்பிணிகள், வயதானவர்கள் பாதிப்பை சந்திக்கின்றனர். ஊராட்சியில் உள்ள சேதமடைந்த ரோடுகளை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.