/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நெரிசலால் தினமும் அவதி: விதிகளை மீறி நிறுத்தப்படும் வாகனங்களால் விபத்து

ADDED : பிப் 15, 2024 06:06 AM

மாவட்டத்தில் கிராமம்,நகர சாலைகள், நெடுஞ்சாலைகளிலும் போக்குவரத்து விதிமுறைகளை மீறி சாலைகளில் வாகனங்கள் அதிக அளவு நிறுத்தப்படுகிறது.இதனால் பலரும் அவதிப்படுகின்றனர். ஏற்கனவே குறுகிய சாலையில் வரும் பஸ்கள் நடு ரோட்டில் நின்று பயணிகளை ஏற்றி இறக்குவதாலும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.
இதனால் அதிக அளவு விபத்துக்கள் ஏற்படுவதுடன் போக்குவரத்து நெரிசலால் ஆம்புலன்ஸ் உள்ளிட்ட அவசர ஊர்திகள் கூட வேகமாக செல்ல முடியாத நிலை ஏற்படுகிறது. போக்குவரத்து வசதிக்காக சாலைகளை விரிவு படுத்தினாலும் கூட சாலைகளில் வரிசை கட்டி நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்கள் சாலை அகலப்படுத்தியதற்கான நோக்கம் வீணாவதுடன் வழக்கம்போல் வாகன ஓட்டிகள் அவதியை சந்திக்கின்றனர்.
சாலைகளில் விதிமுறைகளை மீறி வாகனங்கள் நிறுத்துவதை போலீசார் கண்டு கொள்வதில்லை. போலீசார் அவர்களது கடமைகளை செய்ய தவறுவதால் விதி மீறல்கள் அதிகரித்து போக்குவரத்து நெரிசல் ஏற்பட தொடர் விபத்துக்கள் நடக்கிறது. சாலைகளில் வாகனங்களை நிறுத்துபவர்கள் மீது போலீசார் , ரோந்து போலீசார் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.