ADDED : மே 04, 2025 03:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
குஜிலியம்பாறை : கூம்பூர் ஊராட்சி பாறைப்பட்டியை சேர்ந்தவர் விவசாயி காளிகுறிச்சி 62.
இவரது பசு மாடு தோட்டத்தில் கிணறு அருகே மேய்ந்து கொண்டு இருந்தது. திடீரென கிணற்றுக்குள் தவறி விழுந்தது. அங்கு காளியம்மன் கோயில் கட்டடப் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் இருவர் கிணற்றுக்குள் இறங்கி மாட்டை உயிருடன் பிடித்து கொண்டு ஓரமாக நின்று கொண்டனர். குஜிலியம்பாறை தீயணைப்பு நிலைய அலுவலர் ஜேம்ஸ் அருள் பிரகாஷ் தலைமையிலான வீரர்கள் கயிறு கட்டி மாடை உயிருடன் மீட்டனர்.

