/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆபத்து பள்ளம் தோண்டி கட்டட பணி; தடுத்த கவுன்சிலருக்கு மிரட்டல்
/
ஆபத்து பள்ளம் தோண்டி கட்டட பணி; தடுத்த கவுன்சிலருக்கு மிரட்டல்
ஆபத்து பள்ளம் தோண்டி கட்டட பணி; தடுத்த கவுன்சிலருக்கு மிரட்டல்
ஆபத்து பள்ளம் தோண்டி கட்டட பணி; தடுத்த கவுன்சிலருக்கு மிரட்டல்
ADDED : ஏப் 05, 2025 05:19 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் ரவுண்ட் ரோடு அருகே உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் கட்டடம் பணிக்கு பள்ளம் தோண்டியதை தடுத்த கவுன்சிலருக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.
திண்டுக்கல் ரவுண்டு ரோட்டில் தனிநபர் ஒருவர் பள்ளிகள், குடியிருப்புகள் அதிகம் உள்ள பகுதியில் 20 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டி கட்டடம் கட்டும் பணியில் ஈடுபட்டார்.
அபத்தான பள்ளம் குறித்து அப்பகுதி வார்டு கவுன்சிலர் சித்திக் இதை தடுக்க முயன்றார். அப்போது கட்டட உரிமையாளர்கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசி உள்ளார்.
கவுன்சிலர் கூறியாதாவது: பள்ளம் ஆழமாக தோண்டுவதை அறிந்து கேட்க சென்றபோது கட்டட உரிமையாளர் ஒருமையில் பேசினார். பெரிய ஆட்களை வைத்து காரியம் சாதிக்க முடியும் என கொலை மிரட்டல் விடுக்கும் வகையில் பேசினார்.
டவுன் பிளானிங்க் ஆபீசர் இல்லாத நிலையில் இதற்கு எப்படி அனுமதி பெற்றார் என தெரியவில்லை என்றார். பொறுப்பு கமிஷனர் சிவக்குமாரை தொடர்பு கொண்டபோது, நகரமைப்பு அலுலக அதிகாரிகளிடம் பேசுங்கள் என்றார்.
நகர் திட்டமிடுநர் பணியிடம் இல்லாததால் உதவி அலுவலர்களை தொடர்பு கொண்டபோது, பணிகளை நிறுத்த சொல்லி விட்டோம் என்றனர்.

