/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆண்டுக்கு ரூ.ஒரு கோடி வருமானம்; பாதுகாப்புக்கு தனி காவலாளி இல்லை; பழநி நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் கேள்வி
/
ஆண்டுக்கு ரூ.ஒரு கோடி வருமானம்; பாதுகாப்புக்கு தனி காவலாளி இல்லை; பழநி நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் கேள்வி
ஆண்டுக்கு ரூ.ஒரு கோடி வருமானம்; பாதுகாப்புக்கு தனி காவலாளி இல்லை; பழநி நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் கேள்வி
ஆண்டுக்கு ரூ.ஒரு கோடி வருமானம்; பாதுகாப்புக்கு தனி காவலாளி இல்லை; பழநி நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் கேள்வி
ADDED : ஜூலை 30, 2025 05:57 AM
பழநி : ''பழநி பஸ் ஸ்டாண்ட் மூலம் ஆண்டுக்கு ரூ. ஒரு கோடி வருமானம் இருந்தும் பாதுகாப்புக்கு தனி காவலாளி இல்லை '' என நகராட்சி கூட்டத்தில் கவுன்சிலர் கேள்வி எழுப்பினார்.
பழநி நகராட்சி கூட்டம் தலைவர் உமா மகேஸ்வரி(தி.மு.க.,) தலைமையில் நடந்தது. துணைத் தலைவர் கந்தசாமி (கம்யூ.), கமிஷனர் விநாயகம் , பொறியாளர் ராஜவேலு, இளநிலை பொறியாளர் பாலசுப்பிரமணியம், நகர அமைப்பு அலுவலர் புவனேஸ்வரன், சுகாதார அலுவலர் செந்தில் ராம்குமார் முன்னிலை வகித்தனர். கவுன்சிலர்கள் விவாதம் :
நடராஜ் (அ.தி.மு.க.,): மோட்டார் பைப் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தலைவர்: தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும்.
சரவணன் (தி.மு.க.,): சத்யா நகரில் பாதாள சாக்கடை திட்டத்தால் பைப் லைன்கள் சேதமடைந்துள்ளன. ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும்.
தலைவர்: பாதாள சாக்கடை திட்டத்தை கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும். சுகாதார நிலையத்திற்குசுற்றுச்சுவர் அமைக்கப்படும்.
துணைத்தலைவர் : இ.எஸ்.ஐ., ரோட்டில் சிவகிரி பட்டியிலிருந்து கழிவுகள் கொட்டப்படுகின்றன. இதனால் அப்பகுதியில் பொதுமக்கள் நடக்க முடியாத சூழல் ஏற்படுகிறது. சுகாதாரச் சான்று நகராட்சியில் யாரிடம் வாங்க வேண்டும்.
சுகாதார அலுவலர்: சுகாதாரச் சான்று கமிஷனரிடம் அனுமதி பெற்று வழங்கப்படும். இதுவரை சுகாதார சான்று கேட்ட விண்ணப்பங்கள் வரவில்லை.
ராசு (அ.தி.மு.க.,): பெரியப்பா நகர் காமராஜர் நகர் பகுதிகளில் குடிநீர் குழாய் உடுமலை ரோட்டில் சாக்கடை சரி செய்ய வேண்டும்.
தலைவர்: நடவடிக்கை எடுக்கப்படும்.
பத்மினி முருகானந்தம் (காங்.,): நகராட்சி அருகில் உள்ள ஊராட்சிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படுமா.
தலைவர்: இதுவரை அரசிடம் இருந்து எந்த ஆணையும் வரவில்லை.
சுரேஷ் (தி.மு.க.,): பாலாறு பொருந்தலாறு அணையில் குடிநீர் எவ்வளவு உள்ளது. சண்முக நதி கரையில் அமைக்கப்பட்டுள்ள எரிவாயுமயானம் திறக்கப்படுவது எப்போது . நகராட்சி எல்லையில் அலங்கார வளைவுகள் அமைக்க திட்டம் உள்ளதா.
தலைவர்: 75 புதிய குடிநீர் இணைப்பு விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. ரூ 25ல் இணைப்புகள் வழங்க இயலாத நிலையில் உள்ளது. நகராட்சி எல்லைகளுக்கான அலங்கார வளைவு அமைக்க திட்டம் இல்லை.விரைவில் எரிவாயு மயானம் பயன்பாட்டிற்கு வரும்.
செபாஸ்டியன் (தி.மு.க.,): பாதாள சாக்கடை திட்டம் செயல்படுத்தப்படும் போது இணைப்புகள் அமைக்கப்படும் இடங்களில் கண்காணிப்பு தேவை.
வீட்டு மனைகளுக்கு பாதாள சாக்கடை இணைப்புகள் வழங்கப்படுமா. பாதாள சாக்கடை ஒப்பந்ததாரர் மெத்தனமாக பணிபுரிகிறார். இதனால் சாலை அமைத்த பின் சிரமம் ஏற்படும்.
தலைவர்: பாதாள சாக்கடை திட்டத்தை தனி பொறியாளர் மூலம் கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இளநிலை பொறியாளர்: பாதாள சாக்கடை திட்டம் தொடர்ந்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்படும். பாதாள சாக்கடை திட்டம் முழுவதும் நிறைவடைந்த பிறகு சோதனை அடிப்படையில் செயல்பாடுகளை ஆய்வு செய்த பிறகு தான் சாலை அமைக்கப்படும்.
சாகுல் ஹமீது (தி.மு.க.,): பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஒரு கோடி ரூபாய்க்கு வருமானம் ஆண்டுதோறும் வருகிறது. அதற்கு தனி காவலாளி அமைக்க வேண்டும். அங்குள்ள இலவச கழிப்பறை சேதமடைகிறது. ஆனால் கட்டண கழிப்பறைகள் சேதம் அடைவது இல்லை.
தலைவர்: நடவடிக்கை எடுக்கப்படும்.
செபாஸ்டின் (தி.மு.க.,): பாலாறு பொருந்தலாறு அணையில் தண்ணீர் குளத்திற்கு செல்கிறது. தற்போது தண்ணீரின் அளவு குடிநீருக்கு வழங்கும் அளவைவிட குறைந்து வருகிறது. இதனால் பழநி நகருக்கு தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும்.
இவ்வாறு விவாதம் நடந்தது

