/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தேர்தல் நேரத்தில் போராட்டகளத்தில் அரசு ஊழியர்கள் ,ஆ சிரியர்கள்; புதிய பென்ஷன் திட்டம் ரத்து கோரி போராட்டங்கள் அறிவிப்பு
/
தேர்தல் நேரத்தில் போராட்டகளத்தில் அரசு ஊழியர்கள் ,ஆ சிரியர்கள்; புதிய பென்ஷன் திட்டம் ரத்து கோரி போராட்டங்கள் அறிவிப்பு
தேர்தல் நேரத்தில் போராட்டகளத்தில் அரசு ஊழியர்கள் ,ஆ சிரியர்கள்; புதிய பென்ஷன் திட்டம் ரத்து கோரி போராட்டங்கள் அறிவிப்பு
தேர்தல் நேரத்தில் போராட்டகளத்தில் அரசு ஊழியர்கள் ,ஆ சிரியர்கள்; புதிய பென்ஷன் திட்டம் ரத்து கோரி போராட்டங்கள் அறிவிப்பு
ADDED : பிப் 03, 2024 04:18 AM

வேடசந்தூர் : திண்டுக்கல் மாவட்ட அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் பாராளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் புதிய பென்ஷன் திட்டம் ரத்து உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிப்.26 லிருந்து காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்யவும் தயாராகி வருகின்றனர்.
மாவட்டத்தில் அரசு ஊழியர்கள் ,ஆசிரியர்கள் 20 ஆயிரம் பேர் உள்ளனர். இவர்கள் பலர் மாவட்ட , மாநில சங்கங்களில் முக்கிய பொறுப்பில் உள்ளனர். இதனால் திண்டுக்கல் மாவட்டம் எப்போதும் போராட்டக் களத்தில் முன்னணியில் உள்ளது. 2003 ஏப்ரல் 1 க்கு பிறகு அரசு பணியில் சேர்ந்த அரசு ஊழியர்கள் ,ஆசிரியர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம் நடைமுறையில் உள்ளது. இதனால் அரசு ஊழியர்கள் ,ஆசிரியர்களுக்கு ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு பண பலன்கள் கிடைப்பதில்லை. இதனால் புதிய ஓய்வூதிய திட்டத்தை நிறுத்திவிட்டு பழைய திட்டத்தை செயல்படுத்த பல்வேறு சங்கங்களும், அமைப்புகளும் போராடி வருகின்றன.
சட்டசபை தேர்தலில் தி.மு.க., தேர்தல் அறிக்கையில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்துவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவோம் என்றனர்.
ஆனால் வாக்குறுதி நிறைவேறவில்லை. இதை கண்டித்து அரசு ஊழியர்கள்,ஆசிரியர்கள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில் 20223 டிசம்பரில் மறியல் ஜன.27 ல் டிட்டோ ஜாக் சார்பில் மாவட்ட தலைநகரில் உண்ணாவிரதம் ,சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில் ஜன.30, 31 ல் தற்செயல் விடுப்பு போராட்டம், ஜன.30 ல் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம், தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்கம் உள்ளிட்ட நகராட்சி, மாநகராட்சி பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம், அதே நாளில் திண்டுக்கல்லில் ஜாக்டோ ஜியோ சார்பில் மறியல் நடந்தது. இதை தொடர்ந்து பிப்ரவரி 15-ல் ஜாக்டோ ஜியோ சார்பில் அடையாள வேலை நிறுத்தம் போராட்டம் ,பிப்.16 ல் சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம் சார்பில்
சென்னையில் தமிழக முதல்வரின் வீட்டை முற்றுகை , பிப்.15ல் அரசு ஊழியர்கள் சங்கம் கூட்டமைப்பு சார்பில் உண்ணாவிரதமும் அறிவித்துள்ளனர். பிப். 26 முதல் ஜாக்டோ ஜியோ, டிட்டோ ஜாக், சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம், அரசு அலுவலர் ஒன்றியம் உள்ளிட்ட பெரும்பாலான சங்கங்களும் கால வரையற்ற வேலை நிறுத்தம் செய்ய உள்ளது.
.............
தேர்தலில் எதிரொலிக்கும்
பத்து ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத தி.மு.க., புதிய ஓய்வூதிய திட்டத்தை நீக்கிவிட்டு மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை கொண்டு வருவோம் என தேர்தல் வாக்குறுதி கொடுத்தது. இந்த வாக்குறுதியை நம்பி லட்சக்கணக்கான அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் ஓட்டளித்தனர். தி.மு.க., ஆட்சிக்கு வந்து 3 ஆண்டுகள் முடியும் நிலையில் எந்த முடிவும் எடுக்கவில்லை. பொய்யான வாக்குறுதியை கொடுத்து லட்சக்கணக்கான குடும்பங்களை ஏமாற்றியதாகவே நினைக்கிறோம். மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்தா விட்டால் அரசு ஊழியர்கள் , ஆசிரியர்களின் மனக்குமுறல் வரும் பாராளுமன்றத் தேர்தலில் எதிரொலிக்கும்.
பிரபுடெரிக் ஏங்கல்ஸ்,மாநில ஒருங்கிணைப்பாளர் , சி.பி.எஸ்., ஒழிப்பு இயக்கம்,வேசடந்துார்.
..................

