/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
திண்டுக்கல் ஏட்டுக்கு அதிர்ச்சி தந்த சென்னை டோல்கேட் குறுஞ்செய்தி
/
திண்டுக்கல் ஏட்டுக்கு அதிர்ச்சி தந்த சென்னை டோல்கேட் குறுஞ்செய்தி
திண்டுக்கல் ஏட்டுக்கு அதிர்ச்சி தந்த சென்னை டோல்கேட் குறுஞ்செய்தி
திண்டுக்கல் ஏட்டுக்கு அதிர்ச்சி தந்த சென்னை டோல்கேட் குறுஞ்செய்தி
ADDED : பிப் 03, 2024 05:54 AM
வடமதுரை, : வடமதுரை கூட்டுறவு சங்க அலுவலகம் பின்புறம் வசிப்பவர் சின்னத்துரை. திண்டுக்கல் மேற்கு போலீஸ் ஸ்டேஷனில் தலைமை காவலராக பணிபுரிகிறார். இவரது கார் நேற்றுமுன்தினம் வடமதுரை வீட்டில் இருந்த நிலையில் சென்னை அடுத்த சூரப்பட்டு டோல்கேட்டை கடந்து சென்றதாக இவரது பாஸ்டேக்கில் இருந்து ரூ.70 கட்டணம் கழிக்கப்பட்டு குறுஞ்செய்தி வந்தது.
அதிர்ச்சியான சின்னத்துரை, தனது காரின் நம்பரை போலியாக பயன்படுத்திய வாகனம் இந்த டோல்கேட்டை கடந்து சென்றிருக்கலாம் என சந்தேகம் அடைந்தார்.
இதுகுறித்து விசாரிக்க வலியுறுத்தி தனது காருடன் வடமதுரை போலீஸ் ஸ்டேஷனில் புகார் தந்தார். இணைய வழியில் டோல்கேட் பகுதிக்குரிய அம்பத்துார் போலீஸ் ஸ்டேஷனிலும் புகார் தந்தார்.
சின்னத்துரை குடும்பத்தினர் கூறியதாவது: இத்தொகை சிறிது தானே என விட்டுவிட்டால் இந்த வாகன எண்ணில் போலியாக இயங்கும் மற்றொரு வாகனத்தை பயன்படுத்தி நடக்கும் குற்ற, சமூக விரோத செயல்களுக்கு நாம் பதிலளிக்க வேண்டிய பொறுப்பு வந்து சேரும். இதை தவிர்க்கவே புகார் செய்துள்ளோம் என்றனர்.