/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கறிக்கடை தொழிலாளி வெட்டிக்கொலை
/
கறிக்கடை தொழிலாளி வெட்டிக்கொலை
ADDED : டிச 29, 2025 05:39 AM
திண்டுக்கல்: திண்டுக்கல்லில் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னையில் வீடுபுகுந்து கறிக்கடை தொழிலாளி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவத்தில் 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
திண்டுக்கல் மேட்டுப்பட்டி தெற்குத்தெருவை சேர்ந்தவர் ராஜா 26, கறிக்கடை தொழிலாளி. வட்டிக்கு பணம் கொடுக்கல் வாங்கல் தொழிலும் செய்துள்ளார். இவருக்கும், ராமையன்பட்டி கணேசபுரம் பகுதியை சேர்ந்த 45 வயது பெண்ணிற்கும் பழக்கம் ஏற்பட்டது. இவர்களுக்குள் பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்னை இருந்துள்ளது.
இதுதொடர்பாக, பெண்ணின் உறவினரான ஆர்.வி., நகரை சேர்ந்த உதயா 19 என்பவருக்கும், ராஜாவுக்கும் இடையே முன்பகை இருந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு, கடன் தொகையை வசூலிப்பது தொடர்பாக கணேசபுரத்தில் உள்ள பெண்ணின் வீட்டிற்கு ராஜா சென்றார்.
இதையறிந்த, உதயா, தனது நண்பர்களான முருக பவனம் முத்துராஜ் நகர் பாண்டியராஜன் 18, சோலை ஹால் மதுரை வீரன் நெட்டுத்தெரு விமல் 18, ஆர்.வி.நகர் முனியப்பன் கோவில் தெரு ஹரிஷ் 20 ஆகியோருடன் கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் கணேசபுரத்தில் உள்ள பெண்ணின் வீட்டிற்குள் நுழைந்து ராஜாவை வெட்டிக்கொலை செய்தனர். இதுதொடர்பான புகாரில் உதயா, அவரின் நண்பர்கள் உள்ளிட்ட 4 பேரையும் திண்டுக்கல் தாலுகா போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

