தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ குப்பையை கொட்டி எரிப்பதால் சுவாசக்கோளாறு

குப்பையை கொட்டி எரிப்பதால் சுவாசக்கோளாறு

குப்பையை கொட்டி எரிப்பதால் சுவாசக்கோளாறு


ADDED : ஜூன் 09, 2025 02:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 09, 2025 02:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

மழை நீரால் கொசுக்கள்

திண்டுக்கல் பர்மா காலனி பகுதியில் காலியிடங்களில் மழைநீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தியாகும் இடமாக மாறி வருகிறது . நொய் தொற்று பரவும் முன்பு நீர் கடந்து செல்ல நடவடிக்கை வேண்டும் .விஜயகுமார், திண்டுக்கல்..........----------சேதமான பெயர் பலகை

திண்டுக்கல் மாநகராட்சி நவீன இறைச்சி கூடம் பெயர் பலகையில் எழுத்துக்கள் சேதமடைந்துள்ளது . இறைச்சி கூடம் எங்கு உள்ளது என தெரியாமல் உள்ளது .இதன் பெயர் பலகையை சீராக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். முத்துப்பாண்டி, திண்டுக்கல்...............குப்பையை கொட்டி எரிப்பு

திண்டுக்கல் சிலுவத்துார் ரோடு பாலகிருஷ்ணாபுரம் அருகே ரோட்டோரங்களில் குப்பையை கொட்டி தீ வைத்து எரிப்பதால் புகை மண்டலமாகி சுவாச கோளாறு ஏற்படுகிறது .நோய் பரவும் அபாயம் உள்ளதால் இதை தடுக்க வேண்டும். முருகேசன், திண்டுக்கல்.................----------சேதமான மீட்டர் பெட்டி

திண்டுக்கல் ஸ்கீம் ரோட்டில் உள்ள மின் கம்பத்தில் மீட்டர் பெட்டி சேதமடைந்தது தாழ்வாக உள்ளதால் விபத்து அபாயம் உள்ளது .போக்குவரத்து நிறைந்த பகுதி என்பதால் மீட்டர் பெட்டியை மாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். விஜயலட்சுமி, திண்டுக்கல்....................----------

வீணாகும் சுகாதார வளாகம்

பாகாநத்தம் ஊராட்சி குண்டாம்பட்டியில் பொது சுகாதார வளாகம் பயனற்று வீணாகி வருகிறது .இதனை சீரமைப்பு செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வர ஊராட்சி நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும். ---சுப்பிரமணி, வடமதுரை.

......----------குளக்கரையில் குப்பை

கோபால்பட்டியில் இருந்து பாறைப்பட்டி செல்லும் ரோட்டில் பெரிய கண்மாய் குளக்கரையில் குப்பை கொட்டப்படுவதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. குப்பை கொட்டுவதை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். ராமராசு, ராமராஜபுரம்...........----------சாக்கடையில் அடைப்பு

திண்டுக்கல் தாலுகா அலுவலக நுழைவுவாயில் அருகே சாக்கடையில் குப்பை அடைத்துள்ளதால் கழிவுநீர் செல்ல வழி இல்லாமல் உள்ளது .சில நேரங்களில் ரோட்டில் கழிவுநீர் செல்கிறது. கால்வாயை துார்வார வேண்டும். வேல்முருகன், திண்டுக்கல்................----------

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us