/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
எங்கும் இல்லை பிளிச்சிங் பவுடர் பயன்பாடு.. வி.ஐ.பி.,க்கள் வருகைபோது மட்டும் தாராளம்
/
எங்கும் இல்லை பிளிச்சிங் பவுடர் பயன்பாடு.. வி.ஐ.பி.,க்கள் வருகைபோது மட்டும் தாராளம்
எங்கும் இல்லை பிளிச்சிங் பவுடர் பயன்பாடு.. வி.ஐ.பி.,க்கள் வருகைபோது மட்டும் தாராளம்
எங்கும் இல்லை பிளிச்சிங் பவுடர் பயன்பாடு.. வி.ஐ.பி.,க்கள் வருகைபோது மட்டும் தாராளம்
ADDED : மே 14, 2024 06:13 AM

கொடைக்கானல் : உள்ளாட்சி அமைப்புகளில் சுகாதாரத்துக்காக பயன்படுத்தப்படும் பிளிச்சிங் பவுடர் பயன்பாடு எங்கும் காணமுடியவில்லை. வி.ஐ.பி.,க்கள் வருகை ,அரசு விழாக்களில் மட்டும் தாராளமாக பயன்படுத்தப்படும் அவலம் தொடர்கிறது .
நாள்தோறும் தெருக்களை துாய்மைப்படுத்தி அதில் நோய் தொற்று ஏற்படும் கிருமிகளை அழிப்பதற்காக உள்ளாட்சி அமைப்புகளுக்கு பிளிச்சிங் பவுடர் வழங்கபடுகிறது. இதற்கு மாதம் தோறும் நிதி ஒதுக்கப்படுகிறது. ஒவ்வொரு உள்ளாட்சி அமைப்புகளின் வருவாய்க்கு ஏற்றாற் போல் இவை மாறுபடுகிறது. நோய் தொற்றை தவிர்க்க பயன்படுத்தப்படும் இவைகள் ,ஊராட்சிகள், பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சி என எங்கும் பயன்படுத்துவதில்லை.
பெரும்பாலும் வி.ஐ.பி.,க்கள், அரசு அதிகாரிகள் வருகை , விழா காலங்களில் மட்டும் இவற்றை பயன்படுத்துகின்றனர். ஆனால் உள்ளாட்சி அமைப்புகளில் நோய் தொற்றை தவிர்க்க பிளிச்சிங் பவுடர் பயன்படுத்தப்பட்டதாக முறைகேடான கணக்கு மட்டுமே எழுதப்பட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுகிறது. சாக்கடை கட்டமைப்புகள் உரிய முறையில் இல்லாத சூழல், குப்பை சரிவர அள்ளப்படாத நிலை என பல்வேறு பிரச்னைகளால் மக்களுக்கு நோய் தாக்குதல் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. இதை தவிர்க்கும் விதமாக தெரு ,சாக்கடைகளில் பிளிச்சிங் பவுடர் பயன்பாடு செய்ய வேண்டும். ஆனால் உள்ளாட்சி அமைப்புகளில் இவற்றை பயன்படுத்துவதில்லை. இதை முறையாக கண்காணிக்க வேண்டிய அதிகாரிகளும் கண்டு கொள்ளாத மனநிலையில் உள்ளனர். தற்போது கோடை மழை துவங்கிய சூழலில் நோய் தொற்று அபாயம் ஏற்பட வாய்ப்பு உள்ளது. மேலும் காய்ச்சல் உள்ளிட்ட ஜலதோஷ பிரச்னைகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. இனியாவது உள்ளாட்சி அமைப்புகளில் அரசு விதிமுறைகளுக்கு உட்பட்டு பிளிச்சிங் பவுடர் பயன்பாட்டை கொண்டு வர வேண்டும்.
..................
நடவடிக்கை எடுங்க
உள்ளாட்சி அமைப்புகளில் நோய் பரவலை தடுக்கவும், சுகாதாரத்தை மேம்படுத்தவும் பிளிச்சிங் பவுடர் பயன்படுத்தப்படுகிறது. இருந்த போதும் அனைத்து ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் பிளிச்சிங் பவுடர் பயன்பாடு என்பது கண் துடைப்பாகவே நடக்கிறது. அமைச்சர் ,வி.ஐ.பி.,க்கள் , அரசியல் ரீதியான விழாக்களுக்கு அதிகாரி வரும் போதே பயன்படுத்தப்படுகிறது. இது போன்ற மனநிலை பொதுமக்களை வருத்தமடைய செய்கிறது. இனிவரும் காலங்களில் உள்ளாட்சி அமைப்புகளில் நிர்ணயிக்கப்பட்ட காலகட்டங்களில் சுகாதாரத்தை மேம்படுத்த பிளிச்சிங் பவுடர் பயன்பாட்டை நடைமுறைக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பாலசுப்ரமணி, இயற்கை ஆர்வலர், கொடைக்கானல் :

