ADDED : டிச 15, 2025 05:49 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் மார்க்கெட்டில் அவரைக்காய் விலை அதிகரித்து கிலோ ரூ.65க்கு விற்றது.
ஒட்டன்சத்திரம், வடகாடு, கண்ணனூர் மற்றும் சுற்றியுள்ள கிராமப் பகுதிகளில் அவரைக்காய் அதிகமாக விளைவிக்கப்படுகிறது.
கடந்த மாதம் அறுவடை மும்முரமாக இருந்ததால் ஒரு கிலோ அவரைக்காய் ரூ.40க்கு விற்பனையானது. இந்நிலையில் இந்த மாதம் அடுத்தடுத்து பெய்த சாரல் மழையால் விளைச்சல் பாதிக்கப்பட்டு, மார்க்கெட்டுக்கு வரத்து குறைந்தது.
இதனால், விலை ஏற்றம் அடைந்து கிலோ ரூ.65 க்கு விற்பனையானது.
இனிவரும் காலங்களில் வரத்து இன்னும் குறைய வாய்ப்புள்ளதால் விலை அதிகரிக்கும் என வியாபாரிகள் தெரிவித்தனர்.

