/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
பழநிக்கு பாதயாத்திரை பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை முன்கூட்டியே செய்யலாமே; பொங்கலுக்கு முன்பே பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால்
/
பழநிக்கு பாதயாத்திரை பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை முன்கூட்டியே செய்யலாமே; பொங்கலுக்கு முன்பே பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால்
பழநிக்கு பாதயாத்திரை பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை முன்கூட்டியே செய்யலாமே; பொங்கலுக்கு முன்பே பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால்
பழநிக்கு பாதயாத்திரை பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை முன்கூட்டியே செய்யலாமே; பொங்கலுக்கு முன்பே பக்தர்கள் எண்ணிக்கை அதிகரிப்பதால்
ADDED : டிச 16, 2025 05:40 AM

ஒட்டன்சத்திரம்: பழநிக்கு பாதயாத்திரை செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை, ஆங்கில புத்தாண்டு, தைப்பொங்கலுக்கு முன்பே அதிகமாக இருக்கும் என்பதால் அவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை முன்கூட்டியே செய்துதர நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பழநியில் நடைபெறும் தைப்பூச திருவிழாவில் கலந்து கொள்வதற்கு ஆண்டுதோறும் தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இருந்து பக்தர்கள் விரதம் இருந்து காவடி எடுத்துக்கொண்டு பாதயாத்திரையாக செல்வது வழக்கம். தைப்பூசத்தன்று பக்தர்களின் கூட்டம் மிகவும் அதிகமாக இருக்கும் என்பதால் அதற்கு முன்கூட்டியே பழநிக்கு பாதயாத்திரையாக வருவது அதிகரித்துள்ளது. குறிப்பாக தைப்பொங்கலுக்கு முன்பே பழநிக்கு வரும் பக்தர்கள் கூட்டம் ஆண்டுதோறும் கணிசமாக அதிகரித்து வருகிறது. இவ்வாறு முன்கூட்டியே பாதயாத்திரையாக வருவோர் அடிப்படை வசதிகளின்றி அல்லல்படும் நிலை தொடர்ந்து நடந்து வருகிறது.
பழநி கோயில் தேவஸ்தானம் மூலம் பக்தர்களுக்கு குழந்தை வேலப்பர் கோயில், ஒட்டன்சத்திரம், பழநிக்கு இடைப்பட்ட இடங்கள், ஒட்டன்சத்திரம் போலீஸ் ஸ்டேஷன், ரெட்டியார்சத்திரம் பகுதிகளில் நிழல் பந்தல்கள் அமைக்கப்படுவது வழக்கம். மேலும் அந்தந்த பகுதிகளில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் தங்கள் எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மின்விளக்குகள் அமைத்து கொடுக்கின்றனர். ஒட்டன்சத்திரம் நகராட்சி சார்பில் பக்தர்களின் வசதிக்கு குளிக்கும் இடம், தற்காலிக கழிப்பறைகள், குடிநீர் வசதிகள் ஏற்படுத்தி தரப்படும். இந்த அடிப்படைத் தேவைகளை தைப்பொங்கலுக்கு முன்னர் வரும் பக்தர்களும் பயன்படுத்தும் வகையில் முன்கூட்டியே செய்து தர வேண்டும்.
மேலும் பக்தர்கள் நடந்து செல்வதற்கான நடைபாதை பல இடங்களில் சேதம் அடைந்து காணப்படுகிறது. இவற்றைக் கண்டறிந்து சீரமைக்க வேண்டும். நடைபாதையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றி பக்தர்கள் சிரமம் இன்றி நடந்து செல்ல வழிவகை செய்ய வேண்டும்.
பக்தர்கள் நலனில் அக்கறை காட்டுங்க
ஆண்டுதோறும் பழநியில் நடக்கும் தைப்பூச விழாவில் கலந்து கொள்வதற்கு திருச்சி, தஞ்சாவூர்,புதுக்கோட்டை மாவட்டங்களில் இருந்து வரும் பக்தர்கள் வடமதுரை வேடசந்தூர் வழியாகவும், காரைக்குடி பகுதியில் இருந்து வரும் பக்தர்கள் நத்தம், திண்டுக்கல் வழியாகவும், மதுரை, தேனி உள்ளிட்ட பகுதியிலிருந்து வரும் பக்தர்களும் ஒட்டன்சத்திரத்தில் இருந்து பழநிக்கு ஒரே வழியில் தான் செல்ல வேண்டி உள்ளது. இதனால் ஒட்டன்சத்திரம்- --- பழநி ரோடு வழியாக செல்லும் பக்தர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். இதனை கருத்தில் கொண்டு ஒட்டன்சத்திரத்திற்கும், பழநிக்கும் இடைப்பட்ட இடங்களில் பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை அதிகமான இடங்களில் ஏற்படுத்தி தர வேண்டும். பக்தர்ளுக்கு பழநி தேவஸ்தானம் சார்பில் நிழற்பந்தல் அமைத்தல் குடிநீர் வசதி உள்ளிட்டவை செய்யப்பட்டு வருகிறது. இந்த வசதிகளை முன்கூட்டியே செய்தால் அனைத்து பக்தர்களுக்கும் பயனுள்ளதாக இருக்கும். மேலும் கூட்ட நெரிசலை தவிர்க்க முன்கூட்டியே தேவையான பஸ்களை இயக்க வேண்டும். திருச்சி, தஞ்சாவூர் பகுதிகளுக்கு பழநியில் இருந்து விழாக்கால சிறப்பு ரயில்களையும் முன்கூட்டியே இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- விஸ்வரத்தினம், மாநிலத் தலைவர், தமிழக சிவ பக்தர்கள் குழு, ஒட்டன்சத்திரம்
...

