/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குப்பையில் வீசப்பட்ட 'சிசு' உடல்
/
குப்பையில் வீசப்பட்ட 'சிசு' உடல்
ADDED : செப் 09, 2025 04:36 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துமனை அருகே ரோட்டோர குப்பை தொட்டியில் 5 மாத சிசு உடல் வீசப்பட்டு கிடந்தது.
திண்டுக்கல் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனை பழையக்கட்டட அவசர வார்டு பகுதி காம்பவுண்ட் சுவரையொட்டி வெளியே குப்பைத்தொட்டியில் பயன்படுத்தி துாக்கியெறிப்பட்ட மெத்தை பஞ்சில் இறந்த நிலையில் '5 மாத சிசு' உடல் கிடப்பதை அப்பகுதியினர் பார்த்தனர்.
தலையுடன் உடல் உறுப்புகள் சரிவர வளர்ச்சியடையாமல் குறைமாத சிசுவின் உடலை கைப்பற்றிய வடக்கு போலீசார் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் ஒப்படைத்தனர். சிசுவின் உடலில் இருந்த காயங்கள், கீறல்கள் தெருநாய்கள் கடித்து குதறியதால் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகத்தை ஏற் படுத்தி உள்ளது. சி.சி.டி.வி., கேமரா பதிவுப்படி விசாரித்து வருகின்றனர்.