ADDED : டிச 22, 2025 05:43 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: -நத்தம் அரசு கலை,அறிவியல் கல்லூரியில் நல்லோர் வட்டம் இளைஞர் களம் சார்பில் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கல்லூரி முதல்வர் ராஜாராம் தலைமை வகித்தார். தமிழ்த்துறை தலைவர் தண்டபாணி, நல்லோர் வட்ட மாநில வழிகாட்டி பாலசுப்பிரமணியன், மாநில பொறுப்பாளர் கௌதம்,மாவட்ட மாணவர்கள் பொறுப்பாளர் மகாலெட்சுமி முன்னிலை வகித்தனர்.
இதில் இலட்சிய சமுதாயத்தை உருவாக்குவதில் நல்லோர் வட்டத்தின் செயல்பாடுகள் குறித்தும், வாழ்க்கை கல்வி பற்றியும், நாட்டின் முன்னேற்றத்தில் இளைஞர்களின் பங்கு குறித்தும் மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

