ADDED : ஜன 14, 2025 05:36 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட சிவாலயங்களில் நடந்த ஆருத்ரா தரிசனத்தில் திரளான பக்தர்கள் வழிபட்டனர்.
திண்டுக்கல் அபிராமி கோயிலில் சிவகாமி அம்பாள் நடராஜப் பெருமானுக்கு 21 திருவெம்பாவை பாடல்களால் பாராயணம் செய்து சிறப்பு தீபாராதனை , யாகபூஜைகள் நடந்தன. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பூஜைகளுக்கு பின் பக்தர்களுக்கு திருவாதிரை களி பிரசாதமாக வழங்கப்பட்டது. இது போல் மாவட்டத்தில் உள்ள அனைத்து சிவன் கோயில்களிலும் நடராஜருக்கு ஆருத்ரா தரிசனம் நடந்தது. பால், பன்னீர் உள்ளிட்ட 18 வகையான பொருட்களால் சிறப்பு அபிேஷகம் நடந்தது.
பழநி: பழநி பெரியநாயகி அம்மன் கோயிலில் நடராஜர் சிவகாமி அம்மனுக்கு சிறப்பு யாகம் நடைபெற்றது. அதன்பின் நடராஜர், சிவகாமி அம்மன், விநாயகர், அப்பர், சுந்தரர், திருநாவுக்கரசர், திருஞானசம்பந்தர், ஆகியோருக்கு 16 வகையான அபிஷேகங்கள் நடைபெற்றன. இதன்பின் ரத வீதி உலா,கோயிலில் திருஊடல் நிகழ்ச்சி நடைபெற்றது. கன்பத் கிராண்ட் உரிமையாளர் ஹரிஹரமுத்துஅய்யர், கண்காணிப்பாளர் அழகர்சாமி கலந்து கொண்டனர்.

