/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
2 ஆண்டுகளாக சிகிச்சையில் இருந்த ராணுவ வீரர் பலி
/
2 ஆண்டுகளாக சிகிச்சையில் இருந்த ராணுவ வீரர் பலி
ADDED : செப் 19, 2025 02:22 AM

சின்னாளபட்டி:காஷ்மீர் மாநிலம் லடாக் விபத்தில் சிக்கி 2 ஆண்டுகளுக்கு மேலாக சிகிச்சையில் இருந்த சிறுநாயக்கன்பட்டி ராணுவ வீரர் இறந்ததால் உறவினர் அஞ்சலிக்காக உடல் நேற்று சொந்த ஊருக்கு வந்தடைந்தது
திண்டுக்கல் ஏ.வெள்ளோடு சிறுநாயக்கன்பட்டியை சேர்ந்த கூலி தொழிலாளி சேசுராஜ். இவரது 3வது மகன் தாம்சன் 26. 2016ல் ராணுவ வீரராக பணியில் சேர்ந்தார். 2022ல் காஷ்மீர் மாநிலம் லடாக் பகுதியில் ஜீப்பில் சென்ற போது மலைச்சரிவில் இருந்து பாறை உருண்டு விழுந்ததில் இவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவர் மேல் சிகிச்சைக்காக கோல்கட்டா ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். 2024ல் ஊட்டி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இவரது தந்தை சேசுராஜ் உடன் இருந்து கவனித்து வந்தார்.
நேற்று முன்தினம் தாம்சன் இறந்தார். அங்கு ராணுவ மரியாதைக்கு பின் அவரது உடல் பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது. சிறுநாயக்கன்பட்டிக்கு நேற்று மாலை அவரது உடல் கொண்டுவரப்பட்டது. இன்று அடக்கம் செய்யப்பட உள்ளது.