ADDED : டிச 20, 2025 06:06 AM
திண்டுக்கல்: அமாவாசையை முன்னிட்டு கோயில்களில் சிறப்பு அபிேஷகம் , தீபாராதனைகள் , வழிபாடுகள் நடந்தன.
திண்டுக்கல் மலையடிவார பத்திரகாளியம்மன், அபிராமி அம்மன் கோயில், என்.ஜி.ஓ.,காலனி முனீஸ்வரர் கோயில் ,கோட்டைமாரியம்மன் உட்பட முக்கிய கோயில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. நீர்நிலைகளில் முன்னோர்களை நினைத்து வழிபாடு நடத்தும் நிகழ்வுகளும் நடந்தது. குறிப்பாக கோபால சமுத்திர குளத்தில் திண்டுக்கல்லை சேர்ந்த ஏராளமான மக்கள் வாழைக்காய், பச்சரிசியுடன் படையல் படைத்து முன்னோர்களை நினைத்து வழிபாடு செய்தனர்.
சாணார்பட்டி: கம்பிளியம்பட்டி வரசித்தி வாராகி அம்மன் கோயிலில் உலக நன்மை வேண்டி நடந்த அமாவாசை யாக பூஜையில் அம்மனுக்கு திரவிய அபிஷேகம், பல வண்ண மலர்களால் அலங்காரம் செய்ய சிறப்பு பூஜை நடந்தது. இதை கோயில் பீடாதிபதி சஞ்சீவி சாமிகள் நடத்தினார். பக்தர்கள் தேங்காயில் தீபமேற்றி வழிபாடு செய்தனர். யாக பூஜையில் வரசித்தி வாராகி அம்பாள் மகாலட்சுமி சொரூபமாக காட்சி தந்தார். ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.

