/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சின்ன வெங்காயம் ஏற்றுமதிக்கு அனுமதியுங்க
/
சின்ன வெங்காயம் ஏற்றுமதிக்கு அனுமதியுங்க
ADDED : பிப் 07, 2024 07:01 AM

ஒட்டன்சத்திரம் : விவசாயிகளுக்கு கட்டுபடியான விலை கிடைப்பதற்கு சின்ன வெங்காயம் ஏற்றுமதிக்கு அனுமதி வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.
ஒட்டன்சத்திரம் பகுதியில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் சின்னவெங்காயம் பயிரிடப்பட்டு தற்போது பல இடங்களில் அறுவடை செய்யப்படுகிறது. இதன் காரணமாக மார்க்கெட்டில் சின்ன வெங்காயம் வரத்து அதிகரித்து விலை மிகவும் வீழ்ச்சி அடைந்துள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன் கிலோ ரூ. 50 க்கு மேல் விற்ற சின்ன வெங்காயத்தின் தற்போதைய அதிகபட்ச விலை ரூ.15 ஆக உள்ளது. இந்த விலையானது விவசாயிகளுக்கு கட்டுப்படியானதாக இல்லை. இதனால் சின்ன வெங்காயம் சாகுபடி செய்த விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நல்ல விலை கிடைக்கும் வரை வெங்காயத்தை இருப்பு வைக்கலாம் என்றால் அதுவும் சில நாட்களிலேயே அழுகிவிடும். இந்த பருவத்தில் விளைவிக்கப்படும் வெங்காயம் இருப்பு வைப்பதற்கு ஏற்றதாக இல்லை.
விவசாயிகளுக்கு கட்டுப்படியான விலை கிடைக்க ஏற்றுமதிக்கான தடையை விலக்கி வெங்காய ஏற்றுவதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

