/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தேவை நடவடிக்கை :ஆடி சூறைக்காற்று தாக்குதலை தவிர்க்க முன்னெச்சரிக்கை:அவசியமாகிறது நெடுஞ்சாலை, மின்வாரியம் கண்காணிப்பு
/
தேவை நடவடிக்கை :ஆடி சூறைக்காற்று தாக்குதலை தவிர்க்க முன்னெச்சரிக்கை:அவசியமாகிறது நெடுஞ்சாலை, மின்வாரியம் கண்காணிப்பு
தேவை நடவடிக்கை :ஆடி சூறைக்காற்று தாக்குதலை தவிர்க்க முன்னெச்சரிக்கை:அவசியமாகிறது நெடுஞ்சாலை, மின்வாரியம் கண்காணிப்பு
தேவை நடவடிக்கை :ஆடி சூறைக்காற்று தாக்குதலை தவிர்க்க முன்னெச்சரிக்கை:அவசியமாகிறது நெடுஞ்சாலை, மின்வாரியம் கண்காணிப்பு
ADDED : ஜூலை 22, 2025 04:11 AM

சித்தையன்கோட்டை: ஆடி மாத காற்றின் வேகம் அதிகரிக்க துவங்கி உள்ள நிலையில் திறந்தவெளி, பொது இடங்களில் விபத்து அபாயங்களை ஏற்படுத்தும் அமைப்புகளை சீரமைக்க வேண்டிய அவசியம் தேவையாக உள்ளது.
திண்டுக்கல் நெடுஞ்சாலைத்துறை கோட்டத்தின் கீழ் உட்பட்ட ரோடுகள் அனைத்தும் சி.ஆர்.ஐ.டி.பி., திட்டம் சாரா பணிகள், சாலை பாதுகாப்பு பணிகள் , வெள்ள நிவாரண பணிகள் மூலம் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இவற்றை கோட்டத்தில் உள்ள 35 சாலை ஆய்வாளர்கள், 183 சாலை பணியாளர்கள் கவனித்து வருகின்றனர். இவற்றின் சீரமைப்பு, பராமரிப்பிற்கென பல்வேறு திட்டங்களில் ஒதுக்கீடு தொடர்ந்த போதும் அதிகாரிகள் அலட்சியத்தால் பெருமளவு இடங்களில் பராமரிப்பு கண்டுகொள்ளப்படுவது இல்லை. இதில் ரோட்டோர மரங்கள் முக்கிய இடம் பெற்றுள்ளன. விரிசல்களுடனும் அடிப்பகுதி சேதமடைந்தும் உள்ள விபத்து அபாய ரோட்டோர மரங்களை நெடுஞ்சாலை துறை அப்புறப்படுத்த வேண்டும்.
குக்கிராமங்கள் உட்பட ரோட்டின் இருபுறமும் பெரும்பாலான மரங்கள் காய்ந்த நிலையில் உள்ளன. சில மரங்கள் நடுப்பகுதியில் விரிசல்களுடனும், அடிப்பகுதி அரிக்கப்பட்டு சேதமடைந்த நிலையிலும் உள்ளன. மரங்கள் மட்டுமின்றி தாழ்வான நிலையில் உள்ள மின் ஒயர்கள், சேதமடைந்த தண்ணீர் தொட்டிகள் போன்றவற்றால் விபத்து ஏற்படும் அபாயம் அதிகரித்து வருகிறது. இருப்பினும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகளின் அலட்சியத்தால் இவற்றை சீரமைக்கவோ, அப்புறப்படுத்துவோ நடவடிக்கை எடுப்பதில் தொய்வு நிலவுகிறது. விபத்து அபாயங்களை ஏற்படுத்தும் கட்டமைப்புகளை சீரமைத்தல், அப்புறப்படுத்தலுக்கான நடவடிக்கைகளை முடுக்கி விட மாவட்ட நிர்வாகம் முன் வர வேண்டும்.
........
-----
அலட்சியம் தவிர்க்கலாம்
சில வாரங்களுக்கு முன் பெய்த மழையால் பெரும்பாலான இடங்களில் மழை நீரால் அரிக்கப்பட்டு ரோட்டாரங்கள் மட்டுமின்றி, பள்ளங்களும் விபத்துகளை ஏற்படுத்த தவறவில்லை. இச்சூழலில் முழுவதும் பட்டுப்போன மரங்கள், கிராம ரோட்டோரங்களில் ஏராளமாக உள்ளன. மரங்கள் விபத்து அபாயத்துடன் உள்ள சூழலில் சில நாட்களாக ஆடி மாத காற்றின் திசை வேகம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. இவை பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் முன் விபத்து அபாயம் மரங்களை கண்டறிந்து அப்புறப்படுத்த நெடுஞ்சாலைத்துறை முன்வர வேண்டும். தாழ்வான நிலையில் உள்ள மின் ஒயர்கள், சாய்ந்துள்ள மின் கம்பங்கள், குக்கிராமங்களில் பல மாதங்களாக கண்டுகொள்ளப்படாமல் விடப்பட்டுள்ள மின் வினியோக கட்டமைப்புகள் ,உள்ளாட்சி அமைப்புகளின் துாண்கள், சுற்றுச்சுவர் சேதமடைந்த தண்ணீர் தொட்டி போன்றவற்றை சீரமைக்கவும், அப்புறப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் .இதற்கு மின்வாரியம் ,நெடுஞ்சாலை ,உள்ளாட்சி அமைப்புகளின் ஒருங்கிணைந்த செயல்பாடு அவசியமாகிறது.
அயயாத்துரை ,ஹிந்து முன்னணி நிர்வாகி, சேடபட்டி .
........
-

