ADDED : மார் 11, 2024 06:37 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தொப்பம்பட்டி: பழநி வாகரை மக்காச்சோள ஆராய்ச்சி நிலையத்தில் தமிழ்நாடு வேளாண்மை பல்கலை சார்பில் மக்காச்சோள வீதிய ஒட்டு ரக விதை உற்பத்தி தொடர்பான செயல் விளக்க கூட்டம் நடந்தது.
ஆராய்ச்சி நிலைய இணை பேராசிரியர் செல்வகுமார் தலைமை வகித்தார். ஒருங்கிணைந்த பயிர் மேலாண்மை, களை மேலாண்மை, நீர் மேலாண்மை ஆகியவை குறித்து எடுத்துரைக்கப்பட்டது. ஒட்டு ரக விதையின் சிறப்பு இயல்புகள் குறித்து விளக்கப்பட்டது. மக்காச்சோள ஆராய்ச்சி நிலைய பேராசிரியர்கள் சதீஷ்குமார், சத்திய சீலா, உதவி வேளாண்மை அலுவலர் முத்துலட்சுமி பங்கேற்றனர்.

