/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஆபாசமாக ஆடுவோர் மீது நடவடிக்கை: குறைதீர் கூட்டத்தில் முறையீடு
/
ஆபாசமாக ஆடுவோர் மீது நடவடிக்கை: குறைதீர் கூட்டத்தில் முறையீடு
ஆபாசமாக ஆடுவோர் மீது நடவடிக்கை: குறைதீர் கூட்டத்தில் முறையீடு
ஆபாசமாக ஆடுவோர் மீது நடவடிக்கை: குறைதீர் கூட்டத்தில் முறையீடு
ADDED : ஜூலை 29, 2025 12:56 AM
திண்டுக்கல்: ஆபாசமாக ஆடுவோர் மீது நடவடிக்கை எடுங்க உள்ளிட்ட குறைகளுடன் திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர் கூட்டத்தில் ஏராளமனோர் மனுக்கள் வாயிலாக முறையிட்டனர்.
கலெக்டர் சரவணன் தலைமையில் நடந்த இக்கூட்டத்தில் 200 க்கு மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டன. கோரிக்கை மனுக்கள் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கி தகுதியான மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டது.
திண்டுக்கல் மாவட்ட சலங்கை ஒலி நாட்டுப்புற கலை சங்கத்தினர் அளித்த மனுவில், பாரம்பரியமாக தமிழகம் முழுவதும் அனைத்து திருவிழாக்களிலும் கரகாட்டம் நடைபெறுவது வழக்கம். தற்போது இக்கலை அழிந்து வருகிறது.
ஒரு சிலர் கரகாட்டம் பெயரில் ஆபாசமாக உடை அணிந்து ஆபாச உடல் அசைவுகளுடன் ஆடுகின்றனர். அதை சமூக வலைதளங்களில் பதிவு செய்கின்றனர். இதன் காரணமாக மாணவர்கள், இளைஞர்கள் பாதிப்பு அடைவதுடன் பாரம்பரிய கரகாட்ட கலையும் அழிந்து வருகிறது.
கரகாட்டத்தை குடும்பத்துடன் யாரும் பார்க்க முடியாத அளவிற்கு முகம் சுளிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கரகாட்டம் என்ற பெயரில் ஆபாசமாக ஆடும் நபர்கள் மீதும், சமூக வலைதளங்களில் பதிவு செய்யும் நபர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
அகில இந்திய பார்வர்ட் பிளாக் கட்சியினர் அளித்த மனுவில், அரசு கள்ளர் பள்ளிகள் விடுதிகளுக்கு சமூகநீதி விடுதிகள் என பெயர் மாற்றம் செய்து அரசாணை பிறப்பித்துள்ளது. இதனை ரத்து செய்து கள்ளர் பெயரிலே விடுதி இயங்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.
ஒட்டன்சத்திரம் வடகாடு ஊராட்சி கோட்டை வழி பளியர் குடியிருப்பு பகுதி மக்கள் அளித்த மனுவில் எங்கள் குடியிருப்பில் 15 வது நிதிக்குழு மானிய நிதியின் கீழ் 10 ஆயிரம் லிட்டர் மேல்நிலைத்தொட்டி கட்டப்பட்டுள்ளது. ஆனால் குடிநீர் வழங்கபடுவதில்லை. மாறாக சுற்றி உள்ளோர் அனைவருக்கும் வழங்குகின்றனர்.
சில தனிநபர்களும், உள்ளாட்சி நிர்வாகமும் இணைந்து காழ்புணர்ச்சியோடு இந்த செயலில் ஈடுபடுகின்றன. மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கூறப்பட்டிருந்தது.

