/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
தேர்தலில் அ.ம.மு.க., கூட்டணி அமோக வெற்றி பெறும்: பொதுச்செயலர் டி.டி.வி. தினகரன் பேச்சு
/
தேர்தலில் அ.ம.மு.க., கூட்டணி அமோக வெற்றி பெறும்: பொதுச்செயலர் டி.டி.வி. தினகரன் பேச்சு
தேர்தலில் அ.ம.மு.க., கூட்டணி அமோக வெற்றி பெறும்: பொதுச்செயலர் டி.டி.வி. தினகரன் பேச்சு
தேர்தலில் அ.ம.மு.க., கூட்டணி அமோக வெற்றி பெறும்: பொதுச்செயலர் டி.டி.வி. தினகரன் பேச்சு
ADDED : பிப் 05, 2024 12:44 AM

திண்டுக்கல் : ''வரும் தேர்தலில் அ.ம.மு.க., கூட்டணி அமோக வெற்றி பெறும்''என,அ.ம.மு.க., பொதுச்செயலர் டி.டி.வி. தினகரன் பேசினார்.
அ.ம.மு.க, சார்பில் திண்டுக்கல்லில் நடந்த மாவட்ட பூத் பொறுப்பாளர்கள்,கட்சி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பேசியதாவது:
திண்டுக்கல்லில் ஏற்கனவே நமது நிர்வாகிகள், தொண்டர்கள் தேர்தல் பணியை தொடங்கி விட்டனர்.
மேற்கு, கிழக்கு மாவட்டங்களில் 5 பேர் கொண்ட குழு பூத் கமிட்டிக்கு தயாராகி விட்டது.
பூத் கமிட்டிக்கு 12 பேர் வரை சேர்ந்து தேர்தல் பணியை சிறப்பாக செய்ய வேண்டும். சாதி,மத பேதமின்றி அனைத்திற்கும் பொதுவானது குக்கர் சின்னம். குக்கர் இல்லாத வீடுகளே இல்லை.
வீடு, வீடாக சென்று சின்னத்தை கொண்டு சேர்க்க வேண்டும். என்னை எப்படி பட்டிதொட்டியெங்கும் கொண்டு சேர்ந்தீர்களோ அதேபோல், நம் குக்கர் சின்னத்தையும் கொண்டுபோய் சேர்க்க வேண்டும். குக்கரை பார்த்தாலே நாம் நினைவிற்கு வர வேண்டும். உண்மையான அ.தி.மு.க., தொண்டர்கள் என மக்கள் நினைக்க வேண்டும். பெண்கள் திண்ணை பிரசாரத்தில் ஈடுபட வேண்டும். வரும் தேர்தலில் அ.ம.மு.க., கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றார்.
மேற்கு மாவட்ட செயலர் நல்லசாமி பேசியதாவது: அ.தி.மு.க., வின் உண்மையான தொண்டர்கள் அ.ம.மு.க., வில் உள்ளனர்.
அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். அ.தி.மு.க., வை மீட்டெடுக்கக்கூடிய ஒரே இயக்கம் அ.ம.மு.க., தான்.
மேற்கு மாவட்ட செயலாளர், மண்டல பொறுப்பாளர் நல்லசாமி தலைமை வகித்தார். கிழக்கு மாவட்ட செயலாளர், அம்மா தொழிற்சங்க பேரவை செயலாளர் செல்வபாண்டி முன்னிலை வகித்தார். மாநில அம்மா பேரவை செயலாளர் டேவிட் அண்ணாதுரை பங்கேற்றனர்.

