/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ஸ்ரீராமபுரத்தில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் தொழிலாளி
/
ஸ்ரீராமபுரத்தில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் தொழிலாளி
ஸ்ரீராமபுரத்தில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் தொழிலாளி
ஸ்ரீராமபுரத்தில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கும் தொழிலாளி
ADDED : பிப் 05, 2024 12:39 AM

மழை அளவை அதிகரிக்கும் நோக்கில் பள்ளி,ரோட்டோரங்கள்,பொது இடங்களில் மரக்கன்றுகளை நடவு செய்து பராமரித்தும் வருகிறார் வேடசந்துார் ஸ்ரீராமபுரத்தை சேர்ந்த தொழிலாளி.
மரம் வளர்ப்போம் மழை பெறுவோம் என அரசு தொடர்ந்து விளம்பரம் செய்தாலும், மரங்களை வளர்க்க பெரும்பாலானோர் முன் வருவதில்லை. ஆனாலும் இங்கொன்றும், அங்கொன்றுமாய் மரம் வளர்ப்பதையே தனது நோக்கமாகக் கொண்டு வாழ்வோரும் உண்டு. அந்த வகையில் வேடசந்துார் ஸ்ரீராமபுரத்தை சேர்ந்த கூலி தொழிலாளி மாணிக்கம் 52. இவர் வேலை நேரம் போக பெரும்பாலான நேரங்களில் பொது இடங்களில் மரக்கன்றுகள் நடுவதையும், அதற்கு தண்ணீர் ஊற்றுவது,வேலி அமைத்து பாதுகாப்பதையும் தனது தொழிலாக செய்கிறார். 2018 ல் ஸ்ரீராமபுரம் அரசு துவக்கப்பள்ளி வளாகத்தில் 30 மரக்கன்றுகளை நடவு செய்து இன்று வரை நல்ல முறையில் கவனிக்கிறார். அந்த கன்றுகள் நிழல் தரும் மரமாக காட்சி அளிக்கின்றன.
அதேபோல் ஸ்ரீராமபுரம் காளனம்பட்டி ரோட்டில் மரக்கன்றுகளை நட்டு பராமரிக்கிறார். இரண்டு ஆண்டுகளாக கருப்பண்ணசாமி கோயில் அருகே மரக்கன்றுகளை நடவு செய்து இரும்பு வேலிகளை அமைத்து பாதுகாக்கிறார்.
வேம்பு, புளி, பூவரசன், நவாமரம்,புங்க மரம் உள்ளிட்ட பல்வேறு மரக்கன்றுகள் நடுவதை தனது வேலையாகவும், பொழுதுபோக்காகவும், ஒரு லட்சியத்துடன் செய்கிறார்.
ஆர்வமாக மரங்களை நடுகிறேன்
மாணிக்கம்,தொழிலாளி,ஸ்ரீ ராமபுரம்:நாம் இருக்கும் வரை, மரக்கன்றுகளை வளர்க்க வேண்டும். அது நமக்கு பின்னாலும் பெயர் சொல்லும். தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்தநாளுக்கும் தொடர்ந்து மரக்கன்றுகளை நடவு செய்கிறேன்.
அதேபோல் காமராஜர்,எம்.ஜி.ஆர்., இந்திரா போன்ற தலைவர்களின் நினைவாகவும் தொடர்ந்து மரக்கன்றுகளை நடவு செய்கிறேன். இந்த ஆண்டு போதிய மழை இல்லை. தற்போது 30 மரக்கன்றுகளை வாங்கி கைவசமாக வீட்டில் வைத்துள்ளேன்.
இதுவரை நடவுசெய்து வளர்ந்த மரக்கன்றுகள் அனைத்தும் எனது சொந்த செலவிலேயே செய்யப்பட்டது. இந்த மரக்கன்றுகள் நடும் பணி என் வாழ்நாள்முழுவதும் தொடரும்என்றார்.

