ADDED : ஜூலை 29, 2025 12:52 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பாலசமுத்திரம்: பழநி கொடைக்கானல் வனப்பகுதியான பாலசமுத்திரம் பாலாறு பொருந்தலாறு அணைப்பகுதியில் யானை கூட்டம் சுற்றி வருகிறது. நேற்று முன் தினம் 12 யானைகள் தண்ணீருக்காக பாலாறு பொருந்தலாறு அணை பகுதிக்கு வந்தது.
இதில் குட்டி யானைகளும் இருந்தது. அப்பகுதி பொதுமக்கள் புகைப் படம் எடுத்தனர். காட்டு யானைகள் சுற்றி திரியும் பகுதிகளில் மனிதர்கள் விலகி இருக்க வேண்டும். இதனால் மனித விலங்கு மோதல் தவிர்க்கலாம் என வனத்துறையினர் கூறினர்.

