/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நான்கு வழிச்சாலை சந்திப்பில் தொடரும் விபத்து; துறை ரீதியான அதிகாரிகள் நடவடிக்கை தேவை
/
நான்கு வழிச்சாலை சந்திப்பில் தொடரும் விபத்து; துறை ரீதியான அதிகாரிகள் நடவடிக்கை தேவை
நான்கு வழிச்சாலை சந்திப்பில் தொடரும் விபத்து; துறை ரீதியான அதிகாரிகள் நடவடிக்கை தேவை
நான்கு வழிச்சாலை சந்திப்பில் தொடரும் விபத்து; துறை ரீதியான அதிகாரிகள் நடவடிக்கை தேவை
ADDED : பிப் 07, 2024 07:04 AM

மாவட்டம் முழுவதும் மாவட்டங்களை இணைக்கும் வகையில் நான்கு வழி சாலை பணிகள் நடக்கின்றன. இச்சாலைகள் பல்வேறு இடங்களில் கிராம சாலைகள் இணைப்பு உள்ளது. நான்கு வழி சாலைகள் அமைக்கும் பணிகள் சில இடங்களில் நிறைவடையாமல், பணியாளர்கள் பணிபுரிகின்றனர்.
பெரும்பாலான பகுதிகள் தற்போது வாகன பயன்பாட்டில் உள்ளன. இதில் வரும் வாகனங்கள் அதி வேகத்தில் செல்கின்றது. இந்நிலையில் கிராம சாலைகள் இணைக்கும் பகுதிகளில் சாலை பணிகள் நடக்கிறது. இப்பகுதியில் வாகனங்கள் செல்ல ரோடுகளில் முறையான அறிவிப்பு பலகைகள் இல்லை. எனவே நான்கு வழி பாதை,கிராம சாலை சந்திப்பு பகுதிகளில் வரும் வாகன ஓட்டுனர்களுக்கு குழப்பம் ஏற்படுகிறது.
குறிப்பாக இரவு நேரங்களில் கிராம ரோடுகள் சந்திக்கும் பகுதிகளில் விளக்குகள்,இரவில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் இல்லாமல் உள்ளது. டூவீலர் ஓட்டுநர்கள் நிலை தடுமாறி விபத்தில் சிக்குகின்றனர். கிராம ரோடுகளில் வரும் வாகன ஓட்டுநர்கள்,இப்பகுதியில் கவனக்குறைவாக வாகனங்களை இயக்குவதால்,அதிவேகமாக நான்கு வழிச்சாலையில் வரும் வாகனங்களில் சிக்கி விபத்து ஏற்படுகிறது.
பழநி வரும் பாதயாத்திரை பக்தர்கள் சிரமம் அடைகின்றனர். கிராம ரோடுகளை இணைக்கும் பகுதிகளில் முறையாக இரவு,பகலில் வாகன ஓட்டுநர்களுக்கு தெளிவாக தெரியும் வகையில் அறிவிப்பு பலகைகளை தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் வைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இரவில் ஒளிரும் ஸ்டிக்கர்கள் தேவையான இடத்தில் ஒட்டப்பட வேண்டும். வாகன ஓட்டிகளுக்கு குழப்பத்தை ஏற்படுத்தாத வண்ணம் வழிகாட்டிகளை வழிகாட்டி பலகைகளை அமைக்க வேண்டும். மாவட்ட நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

