/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
நில மோசடியில் சார் பதிவாளர் உட்பட 6 பேருக்கு 3 ஆண்டு சிறை
/
நில மோசடியில் சார் பதிவாளர் உட்பட 6 பேருக்கு 3 ஆண்டு சிறை
நில மோசடியில் சார் பதிவாளர் உட்பட 6 பேருக்கு 3 ஆண்டு சிறை
நில மோசடியில் சார் பதிவாளர் உட்பட 6 பேருக்கு 3 ஆண்டு சிறை
ADDED : ஏப் 09, 2025 03:19 AM
திண்டுக்கல்:திண்டுக்கல்லில் போலி ஆவணம் தயாரித்து நிலமோசடியில் ஈடுபட்ட சார்பதிவாளர் உட்பட 6 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
திண்டுக்கல் திருநகரை சேர்ந்தவர் அழகேந்திரன். இவரது மகள்கள் சுகன்யா, சவுமியா. இவர்கள் பெயரில் கோவிலுார் அருகே வெம்பூரில் 3 வெவ்வேறு சர்வே எண்களில் 8 ஏக்கர் 28 சென்ட் நிலம் கூட்டுப் பட்டாவில் உள்ளது. இதில் அழகேந்திரன் 3ல் ஒரு பாகமான 2.75 ஏக்கரை குஜிலியம்பாறையை சேர்ந்த திம்மையான் - மல்லம்மாள் தம்பதிக்கு விற்பனை செய்தார்.
சுகன்யா, சவுமியா ஆகியோர் 5.53 ஏக்கரை மல்லமாளிடம் ரூ. 8. 50 லட்சம் பெற்று பொது அதிகார ஆவணப் பதிவு செய்து கொடுத்தனர். இதன் பின் மல்லாம்மாள் 7.79 ஏக்கரை போலி ஆவணம் தயார் செய்து 2016ல் ரூ. 22. 62 லட்சத்துக்கு ராஜீ என்பவருக்கு விற்பனை செய்தார்.
இதை அறிந்த சுகன்யா, சவுமியா மாவட்ட நில அபகரிப்பு தடுப்புப் பிரிவு போலீசாரிடம் புகார் அளித்தனர். போலி ஆவணங்கள் தயார் செய்து நிலத்தை விற்பனை செய்ததாக திம்மையான், மல்லம்மாள், சார் பதிவாளர் ஆறுமுகம், நிலத்தரகர் துரைச்சாமி, ராமகிருஷ்ணன், அவரது மகன் ராஜீ ஆகியோர் மீது போலீசார் வழக்கு பதிந்தனர். இதன் விசாரணை மாவட்ட தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடந்தது. இதில் சார்பதிவாளர் உட்பட 6 பேருக்கு தலா 3 ஆண்டு சிறை தண்டனை விதித்து நீதிபதி ஆர். கனகராஜ் தீர்ப்பளித்தார்.

