ADDED : பிப் 03, 2024 05:59 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்தூர் : நான்குவழிச்சாலையில் சென்ற கார் டயர் வெடித்ததில் மறு புறம் சென்ற கார் அங்கு வந்த மற்றொரு கார் மீது மோதியது . இதில் 5 பேர் காயமடைந்தனர்.
வேடசந்துார் அருகே தண்ணீர்பந்தம்பட்டியை சேர்ந்தவர் மளிகை கடை உரிமையாளர் அண்ணாதுரை 52. தனது காரில் திண்டுக்கல் சென்று விட்டு வேடசந்துார் வந்தார்.
சத்தியநாதபுரம் பிரிவு அருகே நேற்று மாலை 4:15 மணிக்கு வந்தபோது டயர் வெடித்ததில் கட்டுப்பாட்டை இழந்த கார், நான்குவழிச்சாலை டிவைடரை தாண்டி மறு புறம் சென்றது .
இதில் சேலத்திலிருந்து வந்த மற்றொரு கார் மீது மோதியது. காரிலிருந்த நான்கு பேர் காயமடைந்தனர். அண்ணாதுரை ஓட்டி வந்த கார் ரோட்டோர பள்ளத்தில் கவிழ்ந்தது. அண்ணாதுரையும் காயமடைந்தார். வேடசந்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

