/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
போலீஸ் எழுத்து தேர்வில் 20 பேர் தேர்ச்சி
/
போலீஸ் எழுத்து தேர்வில் 20 பேர் தேர்ச்சி
ADDED : டிச 29, 2025 05:48 AM
ஒட்டன்சத்திரம்: காளாஞ்சிபட்டி அரசு போட்டி தேர்வு மையத்தில் படித்த 20 பேர் போலீஸ் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
ஒட்டன்சத்திரம் அருகே காளாஞ்சிபட்டியில் கலைஞர் நூற்றாண்டு ஒருங்கிணைந்த அரசு போட்டித் தேர்வு இலவச பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில் சேர்ந்து படித்த 20 பேர் தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்திய போலீஸ் எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
மேலும் குரூப் 2, 2ஏ முதல் நிலை தேர்வில் 10 பேர், குரூப் 4 ல் 7 பேர், 2024 ல் குரூப் 4 தேர்வில் 6 பேர், குரூப் 2,2ஏ வில் 2 பேரும் வெற்றி பெற்று பணிபுரிந்து வருகின்றனர். அதேபோல், சி.டி.எஸ் தேர்வில் 2, குரூப் 1 முதல்நிலை தேர்வில் 2 பேர் தேர்வாகியுள்ளனர்.

