/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கொடை, ஊட்டியில் விபத்து 17 சுற்றுலா பயணியர் காயம்
/
கொடை, ஊட்டியில் விபத்து 17 சுற்றுலா பயணியர் காயம்
ADDED : செப் 15, 2025 10:46 AM

கொடைக்கானல்: கொடைக்கானலில் மலேஷிய சுற்றுலா பயணியர் வந்த வேன், ஊட்டியில் கேரள சுற்றுலா பயணியர் வந்த கார் ஆகியவை பள்ளத்தில் கவிழ்ந்த விபத்தில், 17 பேர் காயமடைந்தனர்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலுக்கு மலேஷியா மலாக்காவை சேர்ந்த, 13 பேர் சுற்றுலா வந்தனர். வேனை, மதுரையைச் சேர்ந்த விக்னேஸ்வரன், 38, ஓட்டினார். பழனி முருகன் கோவிலில் சுவாமி தரிசனம் செய்து கொடைக்கானலுக்கு வந்த நிலையில், பழனி ரோட்டில் வெள்ளைப்பாறை அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த வேன், 100 அடி பள்ளத்தில் தலை குப்புற கவிழ்ந்தது. இதில், சுற்றுலா பயணியர் லோகராஜன், 35, லட்சுமி, 47, பாஸ்கரன், 48, உட்பட, 12 பேர் பலத்த காயமடைந்தனர்.
அதேபோல, கேரளாவை சேர்ந்த, ஐந்து சுற்றுலா பயணியர் நேற்று காலை, காரில் ஊட்டி சென்று விட்டு, மாலை ஊட்டி தேசிய நெடுஞ்சாலை வழியாக கூடலுார் நோக்கி வந்தனர்.
நீலகிரி மாவட்டம், மேல்கூடலுார் அருகே, மாலை, 4:00 மணிக்கு வந்துபோது, கார் கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதில், காரில் பயணித்த ஐந்து பேரும் காயமடைந்தனர்.