/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
இதையும் அகற்றலாமே காலி இடங்களில் வளரும் காய்ந்த புல், புதர்கள்; கொளுத்தும் வெயிலால் ஏற்படும் தீ விபத்துக்கள்
/
இதையும் அகற்றலாமே காலி இடங்களில் வளரும் காய்ந்த புல், புதர்கள்; கொளுத்தும் வெயிலால் ஏற்படும் தீ விபத்துக்கள்
இதையும் அகற்றலாமே காலி இடங்களில் வளரும் காய்ந்த புல், புதர்கள்; கொளுத்தும் வெயிலால் ஏற்படும் தீ விபத்துக்கள்
இதையும் அகற்றலாமே காலி இடங்களில் வளரும் காய்ந்த புல், புதர்கள்; கொளுத்தும் வெயிலால் ஏற்படும் தீ விபத்துக்கள்
UPDATED : ஏப் 08, 2024 07:25 AM
ADDED : ஏப் 08, 2024 05:34 AM

ஒவ்வொரு கோடை காலங்களிலும் மலைகளில் காய்ந்த இலைகளில் இயற்கையாக அல்லது செயற்கையாக சிலரின் விஷமத்தனமாக எண்ணத்துடன் பற்ற வைக்கப்படும் தீ பரவி பெருமளவில் பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இதை தவிர்க்க வனத்துறை சார்பில் மலைகளில் ஒருசில மீட்டர் அகலத்திற்கு புதர்களை வெட்டி தீவைத்து எரித்து அப்பகுதியை நீருன்றி அணைத்து தீத்தடுப்பு கோடுகளை உருவாக்குவர். இவ்விஷயங்கள் அனைத்தும் மலை சார்ந்த பகுதிகளில் வசிப்பர்களுக்கும் மட்டும் அதிகம் தெரிந்திருக்கும்.
சமீப ஆண்டுகளில் கோடை காலங்களில் சமவெளி பகுதியில் இருக்கும் காலி தரிசு நிலங்கள், விளை நிலங்களிலும் கோடை காலத்தில் தீவிபத்து ஏற்பட்டு பயிர்கள், தென்னை, மா,கொய்யா மர வகைகளிலும் பாதிப்படைந்து விவசாயிகளுக்கு பொருளாதார பாதிப்புகளை ஏற்படுத்துகிறது.
2018 கோடை மாதங்களில் வறட்சி மிகுந்த பல இடங்களில் விளை நிலங்கள், தரிசு நிலங்கள் தீப்பற்றி எரிந்தன. ஆங்காங்கே தீயணைப்புத்துறையினர் வாகனங்களுடன் தண்ணீர் கொண்டு அணைத்தனர். தீயணைப்பு வாகனங்கள் வர தாமதம் ஏற்பட்ட சில இடங்களில் ரோடு மறியல் போராட்டங்களும் நடந்தன. அதேபோன்று நிலை தற்போது காணப்படுகிறது. காலையில் கடும் வெயில் இருந்தாலும் மாலையில் வெப்ப சலன மழை பெய்தால் இது போன்ற நிலை ஏற்படாது. தற்போது இரு மாதங்களாக வெயில் மட்டுமே காணப்படுகிறது.
இப்பிரச்னையில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை செய்வதே சிறந்த நடவடிக்கையாக இருக்கும்.
நில உரிமையாளர்கள் தங்களது விளை நிலங்கள் அருகில் காய்ந்து கருகிய புதர்கள் அகற்ற வேண்டும். குறிப்பாக ரோட்டோரங்களில் தரிசு நிலங்களாக வைத்திருப்பவர் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும்.
வெயிலால் காய்ந்து கருகி இலை குவியல்களில் ஒரு தீக்குச்சி அல்லது பீடி, சிகரெட் துண்டுகளால் தீப்பற்றி அதிக சேதத்தை விளைவிக்கும். மரங்களில் காய்ந்து தரையை தொட்டப்படி இருக்கும் கிளைகளை அகற்ற வேண்டும். இவ்வற்றை தீவைத்து எரிக்காமல் ஒரு அடி ஆழத்திற்கு பள்ளம் வெட்டி அதில் போட்டு பின்னர் அதன் மீது மண்ணை நிரப்புவதன் மூலம் சிறந்த இயற்கை உரமாக அந்த நிலத்திற்கே திரும்ப கிடைக்கும்.

