/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
குறைதீர் கூட்டம் இல்லை: குவியும் மக்கள்
/
குறைதீர் கூட்டம் இல்லை: குவியும் மக்கள்
ADDED : ஏப் 30, 2024 05:08 AM
திண்டுக்கல் : தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் குறைதீர் கூட்டங்கள் நடக்காத நிலையிலும் மனு அளிக்க கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் வந்த வண்ணம் இருந்தனர்.
ஒவ்வொரு வாரம் திங்கட் கிழமையும் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் கூட்டங்கள் நடப்பது வழக்கம்.
அன்று மக்கள் தங்களின் புகார்கள், குறைகள், கோரிக்கைகளை மனுக்களாக அளித்துச் செல்வர்.
தற்போது தமிழத்தில் லோக்சபா தேர்தல் முடிந்திருந்தாலும் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் தேர்தல் நடப்பதால் தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளன. இதனால் ஓட்டு எண்ணிக்கை முடியும் வரை குறைதீர் கூட்டங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது.
இருப்பினும் மக்கள் மனுக்களை கலெக்டர் அலுவலக நுழைவு வாயிலில் உள்ள பெட்டியில் போட்டுச் செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இதற்காக குறைதீர் கூட்டம் வருவது போல் மக்கள் குவிந்தனர்.

