/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
செயல்பாட்டிற்கு வந்தது மஞ்சள் பை இயந்திரம்
/
செயல்பாட்டிற்கு வந்தது மஞ்சள் பை இயந்திரம்
ADDED : ஏப் 23, 2024 06:28 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் செயல்படாமல் இருந்த தானியங்கி துணிப்பை இயந்திரம் தினமலர் செய்தி எதிரொலியாய் மீண்டும் பயன்பாட்டிற்கு வந்தது.
திண்டுக்கல் பஸ் ஸ்டாண்டில் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம், மாவட்ட நிர்வாகம் சார்பில் துணிப்பை வழங்கும் தானியங்கி இயந்திரம் பொருத்தபட்டுள்ளது.
இதில் ரூ.10 நாணயம் செலுத்தினால் மஞ்சள் துணிப்பை தானாக விழுமாறு வடிவமைக்க பட்டுள்ளது.
பொதுமக்கள் சிரமமின்றி இந்த பைகளை பெற்று சென்றனர். இதனால் பாலிதீன் பயன்பாடும் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வந்தது.
இந்த இயந்திரமானது சமீபத்தில் சில நாட்களாக செயல்படாமல் இருந்தது. தினமலர் நாளிதழில் முன்தினம் (ஏப்.21) செய்தி வெளியான நிலையில் இயந்திரம் பழுது நீக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தது.
சமீபத்தில் பாலிதீன் பயன்பாடானது மீண்டும் தலைதுாக்க ஆரம்பித்துள்ளதால் புவி வெப்பமயமாதல் பன்மடங்கு பெருகி உள்ளது.
இதனால் மக்கள் மீண்டும் மஞ்சள் பை பயன்பாட்டிற்கு வந்து புவியை காக்க முன்வர வேண்டும்.

