/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரயில்வே மேம்பாலத்தில் வந்தது வெளிச்சம்
/
ரயில்வே மேம்பாலத்தில் வந்தது வெளிச்சம்
ADDED : ஏப் 11, 2024 05:55 AM
திண்டுக்கல் : தினமலர் செய்தி எதிரொலியாக திண்டுக்கல் திருச்சி ரோடு ரயில்வே மேம்பாலத்தில் எரியாமல் இருந்த மின் விளக்குகளை மாநகராட்சி அதிகாரிகள் சீரமைத்தனர்.
திண்டுக்கல் திருச்சி ரோடு ரயில்வே மேம்பாலம் வழியாக ஏராளமான மக்கள் பயணிக்கின்றன . இரவில் இங்குள்ள மின்விளக்குகள் எரியாமல் மேம்பாலம் இருள் சூழ்ந்து கிடக்கிறது. அச்சமடைந்த பாதசாரிகள் வேறு பாதையை பயன்படுத்தி செல்லும் நிலை இருந்தது. இதனால் விபத்துக்களும் அதிக அளவில் நடக்கிறது. இதுமட்டுமின்றி இருளை பயன்படுத்தி பெண்களிடம் செயின் பறிப்பு சம்பவங்களும் நடக்கின்றன. இது தொடர்பாக தினமலர் நாளிதழில் செய்தி வெளியானது. இதன் எதிரொலியாக திண்டுக்கல் மாநகராட்சி கமிஷனர் ரவிச்சந்திரன் உத்தரவில் செயற்பொறியாளர் சுப்பிரமணியன் தலைமையிலான அதிகாரிகள் திருச்சி ரோடு ரயில்வே மேம்பாலத்தில் எரியாமல் இருந்த மின்விளக்குகளை ஆய்வு செய்தனர்.
மின் விளக்குகள் பழுதாகி இருந்தது தெரிய வந்தது. புதிதாகவிளக்குகளை பொருத்தினர். இதை தொடர்ந்து ரயில்வே மேம்பாலம் வெளிச்சமானது.

