/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
மாணவர்கள் சாதனையாக வானில் பறந்த விமானம் திறமைகளின் பயிற்சி களமாக மாறிய விழா மேடை
/
மாணவர்கள் சாதனையாக வானில் பறந்த விமானம் திறமைகளின் பயிற்சி களமாக மாறிய விழா மேடை
மாணவர்கள் சாதனையாக வானில் பறந்த விமானம் திறமைகளின் பயிற்சி களமாக மாறிய விழா மேடை
மாணவர்கள் சாதனையாக வானில் பறந்த விமானம் திறமைகளின் பயிற்சி களமாக மாறிய விழா மேடை
ADDED : ஏப் 07, 2024 05:59 AM

திண்டுக்கல்
உலகம் ஒரு நாடகமேடை அதில் மனிதர்கள் வேடதாரிகள் என்ற பழைய பல்லவியை மாற்றியமைத்து உலகம் ஒரு சர்க்கஸ் கூடாரம். அதில் வித்தையாளன் வெல்கிறான் என்ற உட்கருத்தியலில் மாணவர்களை சாதனை களத்தில் இறக்கி விடுவதற்கான முயற்சியாகவே நடந்தது பள்ளி ஆண்டு விழா .திண்டுக்கல் டி.என்.யூ., நேஷனல் பப்ளிக் சி.பி.எஸ்.சி., பள்ளி ஆண்டு விழாவை சர்க்கஸ் என்ற பெயரிலே நடந்த தீர்மானித்து அதன் பிரமாண்டத்தை கண்முன் நிறுத்தினர். இந்த தலைமுறை காணாத காட்சியான விலங்கியல் பாடமான பயிற்சி வித்தையை கார்டூன் வழியில் வேடமிட்டு மின்னொளியில் எல்.இ.டி., திரைப்பின்னணியில் மாணவர்கள் பார்வையாளர்களின் கண்முன் நிறுத்தியபோது பிரமாண்டத்திற்கு எல்லை என்பதே இல்லை என்றானது. எந்த பள்ளியிலும் இதுவரை புரியாத சாதனையாக மாணவர்கள் கண்டுபிடித்த விமானமானது பள்ளி விழா மேடையில் பறக்க விட்டு டேமோ காட்டியபோது கூட்டத்தில் எழுந்த அதிர்வலையில் அரங்கம் அதிர்ந்தது. எல்.இ.டி., திரையில் வரும் சிறு படம் கூட மாணவர்கள் உருவாக்கிய படைப்பாக மட்டும்தான் காணப்பட்டது. பள்ளி படிப்பையும் தாண்டிய அனுபவ கல்வியை கண்முன் கொண்டு வந்து நிறுத்தியபோது மறைந்து போன கலையை நினைத்து பார்வையாளர்கள் கண்ணிலும் மெல்லிதாக கண்ணீர் துளிகள் வேர்க்க ஆரம்பித்தன.
லட்சியத்தை தொட்டு விட்ட மகிழ்ச்சி
ஹசினி மித்ரா, 8ம் வகுப்பு மாணவர்: இந்த விழாவின் மைய நிகழ்ச்சியான விமானத்தை உருவாக்கி பறக்க வைத்ததை எனது லட்சியத்தின் எல்லையை தொட்டு விட்டதாகவே கருதுகிறேன். இந்த விழாவில் எனது பங்களிப்பாக நடன போட்டியில் ஆசிரியர்கள் அளித்த ஊக்கத்தால் சாதிக்க முடிந்தது. இதை விழா மேடையாக மட்டும் மாணவர்களான நாங்கள் நினைக்கவில்லை. எதிர்கால சாதனையின் பயிற்சி களமாகவும் காண்கிறோம்.
பன்மடங்கு அதிகரித்துள்ளது
அபினவ், 7ம் வகுப்பு மாணவர்: விமானத்தை தயாரித்து சாதனை செய்த போது உள்ளுணர்வில் ஒரு ஆராய்ச்சியாளராகவே உணர்ந்தேன். அந்த திட்டத்தின் வெற்றியை விழா மேடையில் கொண்டு சென்று கிடைத்த ஆரவாரத்தில் எனது சாதனையின் ஆக்கமானது மேலும் பன்மடங்கு அதிகரித்துள்ளது.
கற்பிக்கும் ஆசிரியர்களை பெற்றோர்க்கு அடுத்த இடத்தில் கடத்துவதை விடவும் ஒரே நேர்கோட்டில் இடம்பெற செய்து வணங்க தோன்றுகிறது. அந்த அளவு எனக்குள் இருந்த சாதனையாளரை தட்டி எழுப்பிய பெருமை எனது ஆசிரியர்களையே சாரும்.
உணர்வின் எழுச்சியை துாண்டியது
சபரி இன்பன், 8ம் வகுப்பு மாணவர்: ஆசிரியர்கள் லீமா, சசிரேகா ஊக்கப்படுத்தலால் எனக்கு இந்த கலை மேன்மையடைந்துள்ளது.
ஒரு போட்டியில் ஒரு மாணவர் மட்டுமே பங்கேற்க முடியும் என விதியால் மேடைச்சாதனை வாய்ப்பு மாணவர்களிடம் சரிசமமாக பகிர்ந்தளிக்கபட்டுள்ளது.
சர்க்கஸ் என்பது இப்படித்தான் இருக்குமா என கேட்கும்படியாக விழா மேடையை சர்க்கஸ் கூடாரமாக்கி விலங்குகளாய் மாணவர்கள் வேடமிட்டு நிகழ்ச்சி நிகழ்த்தியது வாழ்வின் மறக்க முடியாத அம்சமாக பசுமை நினைவாக உள்ளது.
சாத னையாளராக உருப்பெற செய்யும்
ஸ்ரீஜித் குமார், 7ம் வகுப்பு மாணவர்: மேடைக்கூச்சத்தை இத்தனை சீக்கிரம் விரட்ட முடியுமா என்கிற வித்தையை ஆசிரியர்களின் பயிற்சியால் அறிந்து வியக்கிறேன். கல்விக்கு முக்கியத்துவம் கொடுத்து அதே நேரத்தில் கடுமையான பயிற்சியை மாணவர்களிடம் திணித்து குறைந்த நாட்களில் சாதனையாளராக உருப்பெற செய்யும் வித்தை ஒரு நல்லாசிரியரிடம் நிறைவே உண்டு என்பதை அனுபவத்தால் உணர்ந்துள்ளேன். கணினி அனிமேஷன் துறையில் சாதிக்க நினைக்கும் எனது லட்சியத்தை அதிகரிக்க தீர்மானித்துள்ளேன்.
அனுபவத்தால் உணர்ந்தோம்
ஷாப்ரின், 6 ம் வகுப்பு மாணவி: பள்ளி ஆண்டு விழா என்பது பெற்றோர்களுக்கு அவர்களுடைய பிள்ளைகளின் வளர்ச்சியை எடுத்து காட்டிமுன்வைப்பதாகும். விழா மேடையில் சாதிக்கும் மாணவருக்கு கிடைக்கும் கைதட்டல் சத்தத்தை பெற்றோர்கள் கூட்டத்தோடு கூட்டமாக கேட்பதில்தான் பாச உணர்வு பலப்படுகிறது என்பதை அனுபவத்தால் உணர்ந்துள்ளோம். எம்பள்ளியின் பாடத்திட்டத்தில் உலக மேடையை சுற்றி வரதுாண்டுகோல் ஆயுதமாக உள்ளது.

