ADDED : மார் 23, 2024 06:26 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
வேடசந்துார்: கல்வார்பட்டி ஊராட்சி ரங்கநாதபுரத்தை சேர்ந்தவர் புவனேஸ்வரி 28. இவருக்கும் வேடசந்துார் நத்தப்பட்டியை சேர்ந்த மதியழகனுக்கும் திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
ஒராண்டாக புவனேஸ்வரி மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் இருந்தார். நேற்று அதிகாலை வீட்டை விட்டு வெளியேறிய அவர் பயன்பாடற்ற பொதுக் கிணற்றில் விழுந்து தற்கொலை செய்து கொண்டார். கூம்பூர் எஸ்.ஐ., திலிப்குமார் விசாரிக்கிறார்.

