/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சாதனையின் சிகரங்களாய் மாணவர்கள்;மேடை கூச்சத்தை தகர்த்த பள்ளி
/
சாதனையின் சிகரங்களாய் மாணவர்கள்;மேடை கூச்சத்தை தகர்த்த பள்ளி
சாதனையின் சிகரங்களாய் மாணவர்கள்;மேடை கூச்சத்தை தகர்த்த பள்ளி
சாதனையின் சிகரங்களாய் மாணவர்கள்;மேடை கூச்சத்தை தகர்த்த பள்ளி
ADDED : ஏப் 06, 2024 05:50 AM

திண்டுக்கல்
வகுப்பறையை உலகமாக்கி வருகை பதிவேட்டில் 100 சதவீத சாதனையை எட்டும் மாணவர் கூட்டத்தை ஏ.கே.வி. வித்யாலயா சி.பி.எஸ்.சி.,பள்ளி விழாவின் சங்கம் எனும் 2ம் ஆண்டு விழா நிகழ்ச்சி திசை திருப்பி உள்ளது. விளையாட்டில் ஈடுபட வைக்கும் பள்ளியின் நோக்கத்தின் தாக்கத்தை விழாவின் பிரமாண்ட மேடைக்களத்தில் மாணவர்கள் நிகழ்த்திய சாதனை நன்குஉணர்த்தியது. மாணவர்களை மேடை ஏற்றி பெருமை படுத்துவது என்ற ஒன்றை மட்டுமே நோக்கமாக கொண்டு பள்ளி நிர்வாகம் நடத்திய நிகழ்ச்சி தெளிவுபடவைத்தது.
இயற்கை சூழல், எழில் கொஞ்சும் தென்றல், ஆராவாரமற்ற பிரமாண்டம் இவைகளின் அடையாளமாக பள்ளியின் அமைவிடமும், விழா நிகழ்ச்சியும் இருந்தது. மாணவர்களின் சிந்தனையில் மட்டுமின்றி சுவாசிக்கும் காற்றிலும் ஆரோக்கியத்தை உருவாக்கும் சூழல் என்பது ஏ.கே.வி. வித்யாலயா சி.பி.எஸ்.சி.,பள்ளியில் சாத்தியமாகும் என்ற நிலை உள்ளது. எரியும் நெருப்பை சுமந்து விழா மேடையில் மாணவர்கள் நிகழ்த்திய பல்வேறு சாகச நிகழ்ச்சிகளை
கண்டு பார்வையாளர்கள் இருக்கையின் உச்சிக்கே சென்றனர்.
சர்வதேச தரத்தில் விழா
ரகுராமன், பி.எஸ்.என்.ஏ.,கல்லுாரி முன்னாள் தலைவர்: ஏ.கே.பி.வித்யாலயா மெட்ரிக் பள்ளியானது ஆண்டு விழா, மழலையர் பட்டமளிப்பு விழா, விளையாட்டு விழா என முப்பெரும் விழாக்களின் சங்கமமாக்கி இந்த நிகழ்ச்சியை நடத்தி உள்ளனர். பாடத்திட்டத்தில் புதிய முறைகளை கையாண்டு வரும் கல்வி ஆண்டில் சாதனைக்காக காத்திருக்கின்றனர். ஒரு விழாவை எப்படி சர்வதேச தரத்திற்கு நடத்த முடியும் என்பதற்கும் இந்த பள்ளி முன்னுதாரணமாக தெரிகிறது.
பாராட்டுக்கள் குவிகிறது
ஜெயசீலன், எல் அண்ட் டி., முன்னாள் பொது மேலாளர்: பள்ளி ஆண்டு விழா என்பது மாணவர்களின் பேராற்றலை அளக்கும் அளவுகோளாகும். அந்த வகையில் இந்த ஆண்டு விழாவானது மாணவர்களின் தரத்தை பன்மடங்கு உயர்த்தி உள்ளது. நிகழ்ச்சிகளை 'லைவ்'வாக காட்டியதில் பார்வையாளர்களின் எண்ணிக்கையும் பாராட்டும் குவிந்தபடி உள்ளது.
கல்வி சாதனைக்கு தயார்
கற்பகம், பள்ளி முதல்வர்: மாணவர்களிடையே தேச ஒற்றுமையை வளர்ப்பதே எதிர்கால வல்லரசு இந்தியாவின் அறிகுறியாகும். அதற்கான அச்சாரமாகவே அனைத்து நிகழ்ச்சிகளையும் தயாரித்து நடத்தி வருகிறோம்.
சி.பி.எஸ்.சி., பாடமுறையிலான எங்களது பள்ளியின் கல்வி கொள்கையால் மாணவர்கள் படிப்பிலும் சாதனை புரிவர் என்பதை உறுதியாக கூற முடியும். இதற்கான அர்ப்பணிப்பு பணியானது விழா நிகழ்ச்சி ஏற்பாட்டில் ஆசிரியர்களின் உழைப்பு தெளிவு படுத்தியது .
சளைக்காது சாதனை
ஸ்ரீநிதி ரவிச்சந்திரன், ஆங்கில ஆசிரியை: எனது அனுபவத்தில் கல்வியின் முக்கியத்துவம் விளையாட்டிற்கும் உண்டு என்பதை இந்த விழா தெளிவு படுத்தி உள்ளது. மாணவர்களின் ஈடுபாடு, பெற்றோர்கள் ஒத்துழைப்பால், பள்ளியில் பயிலும் 140 மாணவர்களில் 120 பேர் மேடையில் தோன்றி அரங்கேற்றம் செய்து சாதனை புரிந்துள்ளனர். அதிலும் மாணவர்களில் பலர் மூன்று , ஐந்து நிகழ்ச்சிகளுமாக பங்கேற்று சளைக்காத சாதனை புரிந்ததை கண்டு பயிற்சியாளர்களான நாங்களே வியப்புற்றோம்.
தடைக்கல்லை படிகல்லாக்கியது
விசாலினி , மாணவி: பரதம், சிலம்பம், கரகம் நிகழ்ச்சிகளை இந்த விழாவில் நிகழ்த்தி பார்வையாளர்களை பரவச படுத்தினேன். எனது லட்சியமான கலெக்டராவதற்கு பெரும் தடைக்கல்லாக இருந்த மேடை கூச்சத்தை முற்றிலும் தகர்ந்து முன்னேறி செல்லும் வகையில் இந்த பள்ளி விழா நிகழ்ச்சி படிக்கல்லாக்கி உள்ளது. உன்னாள் முடியும் என்ற சொற்களை வகுப்பாசிரியர்கள் ஒவ்வொரு மாணவருக்குள்ளும் திணித்து சாதனைக்கு வித்திட்டுள்ளனர்.

