/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ரோடு சீரமைப்பு பணி ஒருபுறம் பறக்கும் படை சோதனை மறுபுறம் நெரிசலால் 3 மணி நேரம் பரிதவித்த சுற்றுலாப் பயணிகள்

ADDED : மார் 30, 2024 05:08 AM

கொடைக்கானல், : கொடைக்கானல் பெருமாள்மலை இடையே நடக்கும் ரோடு சீரமைப்பு பணி, தேர்தல் பறக்கும் படையின் சோதனையால் 3 மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
பெருமாள்மலை வெள்ளி நீர்வீழ்ச்சி இடையே 2 கி.மீ.,துாரம் ரோடு சீரமைக்கும் பணிக்காக ஆங்காங்கே ரோட்டோரம் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் பள்ளம் தோண்டி உள்ளனர். இந்த சீரமைப்பு பணியால் இரு வழித்தடங்களில் செல்லும் வாகனங்கள் ஒருவழித்தடத்தில் செல்வதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு நேற்று முன்தினம் முதல் பயணிகள் அவதி அடைந்தனர். இதையடுத்து வெள்ளி நீர்வீழ்ச்சி சோதனை சாவடியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகனங்களில் சோதனையில் ஈடுபட்டனர். நேற்று காலை 3 மணி நேரம் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட அத்தியாவசிய தேவைகள், அவசர சிகிச்சைக்கு செல்வோர், காய்கறிகள், கொண்டு செல்வோர் பாதிப்புக்கு ஆளாகினர். மதியத்திற்கு பின் ஒரு வழியாக நெடுஞ்சாலைதுறையினர் தோண்டிய பள்ளங்களை மூடிய பின் நெரிசல் சற்று தணிந்தது. இருந்த போதும் தேர்தல் பறக்கும் படையினரின் சோதனையால் மீண்டும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதை வேறு இடத்திற்கு மாற்றி பயணிகளின் அவதியை தவிர்க்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.