ADDED : செப் 12, 2024 05:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
நத்தம்: நத்தம் அருகே செங்குளம் விரிச்சலாறு பாலம் பகுதியில் நீர்நிலை புறம்போக்கை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து மா மரங்கள் வளர்த்து வருவதாக வருவாய்த்துறை , பொதுப்பணித்துறைக்கு புகார்கள் வந்தது.
வருவாய் துறையினர் ஆய்வில் மரங்கள் ஆக்கிரமிப்பில் இருப்பது கண்டுபிடிக்கபட்டது.
இதை தொடர்ந்து ஆக்கிரமிப்பு மரங்களை மண் அள்ளும் இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டது. தாசில்தார் சரவணக்குமார், மண்டல துணை தாசில்தார் சுந்தரபாண்டியன், பொதுப்பணித்துறை பணி ஆய்வாளர் தவம் பங்கேற்றனர்.

