/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
வேலை வாய்ப்பை உருவாக்கவில்லை மா.கம்யூ., பிரகாஷ் காரத் பேச்சு
/
வேலை வாய்ப்பை உருவாக்கவில்லை மா.கம்யூ., பிரகாஷ் காரத் பேச்சு
வேலை வாய்ப்பை உருவாக்கவில்லை மா.கம்யூ., பிரகாஷ் காரத் பேச்சு
வேலை வாய்ப்பை உருவாக்கவில்லை மா.கம்யூ., பிரகாஷ் காரத் பேச்சு
ADDED : ஏப் 08, 2024 05:51 AM

ஒட்டன்சத்திரம், பத்து ஆண்டுகளாக மோடி அரசு இளைஞர்களுக்கு எந்த வித வேலை வாய்ப்பு உருவாக்கவில்லை, என மா.கம்யூ., அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் பேசினார்.
ஒட்டன்சத்திரத்தில் நடந்த இண்டியா கூட்டணி மா.கம்யூ., வேட்பாளர் சச்சிதானந்தத்ததை ஆதரித்து பிரசாரம் செய்த அவர் பேசியதாவது : இந்த தேர்தல் இந்தியாவின் எதிர்கால தலைவிதியை தீர்மானிக்கக் கூடிய தேர்தல். இண்டியா கூட்டணி உருவாக்கப்பட்ட பிறகு இதற்கு எதிராக பா.ஜ., ஒரு யுத்தத்தையே நடத்திக் கொண்டிருக்கிறது. பா.ஜ., அரசுக்கு எதிராக பிரசாரம் செய்ய முடியாத அளவிற்கு இரு மாநில முதல்வர்களை சிறையில் அடைத்துள்ளது.
10 ஆண்டுகளாக மோடி அரசு இளைஞர்களுக்கு எவ்வித வேலை வாய்ப்புகளையும் உருவாக்கவில்லை. சர்வதேச தொழிலாளர் அமைப்பு இந்தியாவில் வேலையில்லாமல் இருப்பவர்களில் 83 சதவீதம் இளைஞர்கள் என குறிப்பிடப்பட்டுள்ளது. நாட்டில் லட்சக்கணக்கான பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளது. சிறு குறு தொழிலுக்கு எவ்வித சலுகையும் அளிப்பதில்லை. பிரதமர் மோடி தனது பிரசார கூட்டங்களில் இண்டியா கூட்டணி ஊழல் கட்சிகளின் கூட்டணி என்கிறார். ஊழலைப் பற்றி யார் பேசுவது. மோடி அரசுதான் ஊழல் உடைய மொத்த உருவமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது.
கடந்த தேர்தலில் தமிழ்நாட்டிலும் கேரளாவிலும் பா.ஜ., ஒரு சீட்டில் கூட வெற்றி பெற முடியவில்லை,என்றார்.
தி.மு.க., மாவட்ட துணைச் செயலாளர் ராஜாமணி தலைமை வகித்தார் நகரச் செயலாளர் வெள்ளைச்சாமி வரவேற்றார். ஒன்றிய செயலாளர்கள் ஜோதீஸ்வரன், தர்மராஜன், தங்கராஜ், தலைமை செயற்குழு உறுப்பினர் கண்ணன், காங்., மாவட்டச் செயலாளர் சதீஷ்குமார், மா.கம்யூ., ஒன்றிய செயலாளர் சிவமணி கலந்து கொண்டனர்.

