/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
கொட்டித்தீர்க்கும் மழை! 5 வது முறையாக 100 மி.மீ., கடந்த மழையளவு: திண்டுக்கல்லில் இடிந்த வீடு,சாய்ந்த நெற்பயிற்கள்
/
கொட்டித்தீர்க்கும் மழை! 5 வது முறையாக 100 மி.மீ., கடந்த மழையளவு: திண்டுக்கல்லில் இடிந்த வீடு,சாய்ந்த நெற்பயிற்கள்
கொட்டித்தீர்க்கும் மழை! 5 வது முறையாக 100 மி.மீ., கடந்த மழையளவு: திண்டுக்கல்லில் இடிந்த வீடு,சாய்ந்த நெற்பயிற்கள்
கொட்டித்தீர்க்கும் மழை! 5 வது முறையாக 100 மி.மீ., கடந்த மழையளவு: திண்டுக்கல்லில் இடிந்த வீடு,சாய்ந்த நெற்பயிற்கள்
ADDED : மே 21, 2024 06:44 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்டத்தில் நேற்று முன்தினம் கொட்டித் தீர்த்த மழையில் ஒரே நாளில் 319.70 ஆக பதிவாகி உள்ள நிலையில், 2 வாரங்களில் மழையளவு 5 முறை 100 மி.மீ., ஐ தாண்டி பதிவாகி உள்ளது.இதோடு மழையால் திண்டுக்கல்லில் இடிந்தநிலையில் நெற்பயிற்களும் சாய்ந்தன
திண்டுக்கல் மாவட்டத்தில் மார்ச், ஏப்., ல் வெயில் வாட்டி வதைக்க தினமும் 100 டிகிரி வெயில் பதிவானது. அதே நேரத்தில் மே 4 தேதி அக்னி நட்சத்திரமும் தொடங்கியது. இதனால வெயிலின் தாக்கம் அதிகமாகும் என்ற நிலை இருந்தாலும் மே 5 முதலே மழை பெய்யத் தொடங்கியது.
அன்று மட்டும் 128.90 மி.மீ., மழை பதிவானது. அன்று முதல் மாலை , இரவு நேரங்களில் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. பகல் நேரங்களில் வெயில் வழக்கம் போல் சுட்டெரித்தாலும் மதியம் ஒரு மணிக்கு மேல் மேகமூட்டமாக மாறி குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை இருந்து வருகிறது.
இந்நிலையில் நேற்று முன்தினம், நேற்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது. அதன்படி நேற்று முன்தினம் மதியம் 1 :00 மணிக்கு மேல் கருமேகம் சூழ மாலை 4:00 மணிக்கு மேல் பெய்யத் தொடங்கி லேசான மழையாக இரவு வரை நீடித்தது.
இதை தொடர்ந்து நேற்று காலை நிலவரப்படி மழையின் அளவு 319.70 மி.மீ., ஆகும். இதுவே இவ்வாண்டில் பெய்த அதிகபட்ச மழையளவு. மேலும் அக்னி நட்சத்திரம் தொடங்கி தற்போது வரையிலான 2 வாரத்தில் 5 முறை 100 மி.மீ., ஐ கடந்து மழை பதிவாகி உள்ளது.
இடிந்த வீடு
திண்டுக்கல் நகர் பிச்சை முைஹதீன் சந்து பகுதியில் உள்ளது 3 மாடி பழமையான வீடு. நேற்று மதியம் 3:15 மணிக்கு வீட்டின் பால்கனி சரிய தொடங்கிய சிறிது நேரத்தில் அடுத்தடுத்து 2 ம் மாடி, தரைத்தள பால்கனிகளும் இடிந்துவிழுந்தன.
வீடுகளுக்குள் நிறைய இடங்களில் விரிசல் ஏற்பட்டது. வீட்டில் எவரும் இல்லாததால் பாதிப்பு இல்லை. தீயணைப்புத்துறையினர் இடிந்த பகுதிகளை அகற்றினர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள பழமையான கட்டடங்களில் ஆய்வு மேற்கொள்ள வேண்டும்.
சாய்ந்த நெற்பயிர்கள்
திண்டுக்கல் அருகே கல்லுப்பட்டி, ராஜகாபட்டி, சந்தப்பட்டி, பண்ணைப்பட்டி, குமாரபாளையம் உள்ளிட்ட கிராமங்களில் அதிகளவில் நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளன.
நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாரான நிலையில் மழையின் காரணமாக நெற்பயிர்கள் அனைத்தும் வயல்களில் சாய்ந்ததோடு நெல் மணிகளும் உதிர்ந்தால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
அவர்கள் கூறியதாவது : சில தினங்களில் அறுவடை செய்ய இருந்த நிலையில் மழையால் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளன. இதனால் ஏற்பட்டுள்ள நஷ்டத்திற்கு வேளாண்மை துறை ஆய்வு செய்து இழப்பீடு வழங்க வேண்டும் என்றனர்.

