/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
85 வயதிற்கு மேற்பட்டோர் மாற்றுத்திறனாளிகள் 32,594 வீட்டிலிருந்து ஓட்டளிக்க விருப்பப் படிவம்

ADDED : மார் 23, 2024 06:23 AM
திண்டுக்கல்: லோக்சபா தேர்தலில் 85 வயதிற்கு மேற்பட்ட முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்து வாக்களிக்கும் வகையில் 32,594 வாக்காளர்கள் கண்டறியப்பட்டதில் 26,508 பேருக்கு விருப்பப் படிவம் வழங்கப்பட்டுள்ளது.
தேர்தலில் 100 சதவீதம் ஓட்டளிக்கும் வகையில் வாக்காளர்களுக்குத் தேவையான அனைத்து வசதிகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அதன் ஒரு பகுதியாக 85 வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் வீட்டிலிருந்தே ஓட்டளிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.
அதன்படி மாவட்டத்தில் 85 வயதிற்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் கொண்ட பட்டியல் ஓட்டுச்சாவடி அலுவலர்களுக்கு வழங்கப்பட்டு அவர்களில் வீட்டிலிருந்தே ஓட்டளிக்க விருப்பப் படிவம் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
அதன்படி சட்டசபை தொகுதி வாரியாக பழநியில் 3302 பேர் கண்டறியப்பட்டு 3032 பேருக்கும், ஒட்டன்சத்திரத்தில் 5292 பேர் கண்டறியப்பட்டு 4968பேருக்கும், ஆத்துாரில் 5095 பேர் கண்டறியப்பட்டு 4231 பேருக்கும், நிலக்கோட்டையில் 4420 பேர் கண்டறியப்பட்டு 3644 பேருக்கும், நத்தத்தில் 4634 பேர் கண்டறியப்பட்டு 3482 பேருக்கும், திண்டுக்கல்லில் 4572 பேர் கண்டறியப்பட்டு 2292 பேருக்கும், வேடசந்துாரில் 5279 பேர் கண்டறியப்பட்டு 4859 பேருக்கும் விருப்பப்படிவம் வழங்கப்பட்டுள்ளது.