/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
ராமகிரி பெருமாள் கோயிலில் பங்குனி தேரோட்டம்
/
ராமகிரி பெருமாள் கோயிலில் பங்குனி தேரோட்டம்
ADDED : மார் 27, 2024 06:49 AM

குஜிலியம்பாறை : ராமகிரி கல்யாண நரசிங்க பெருமாள் திருக்கோயிலில் நடந்த பங்குனி தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.
குஜிலியம்பாறை ராமகிரி கல்யாண நரசிங்க பெருமாள் திருக்கோயில் பங்குனி திருவிழா மார்ச் 18 ல் கொடியேற்றத்துடன் துவங்கியது.
மார்ச் 24 மாலை திருக்கல்யாணம், 25 ல் குதிரை வாகனத்தில் சுவாமி வலம் வரும் நிகழ்ச்சி நடந்தது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பங்குனி தேரோட்டம் நேற்று நடந்தது.
இதையொட்டி கல்யாண நரசிங்க பெருமாள் ஸ்ரீதேவி பூதேவி, கமலவல்லி தாயாருக்கு பூஜைகள் செய்ய சுவாமிகள் திருத்தேரில் எழுந்தருளினர். தொடர்ந்து காலை 8:30 மணிக்கு தேரோட்டம் துவங்கியது.
ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர். ஒரு மணி நேரத்திற்கு மேலாக தேரோட்டம் நடந்த நிலையில் நிலைக்கு வந்தது.
திருப்பணி கமிட்டி தலைவர் கருப்பணன், ஹிந்து அறநிலைத்துறை மண்டல இணை ஆணையர் பாரதி, செயல் அலுவலர் கனகலட்சுமி, ஆய்வாளர் ராஜலட்சுமி, கோயில் மணியகாரர் சதாசிவம், மூத்த அர்ச்சகர் ராமகிருஷ்ணன், அர்ச்சகர்கள் ராஜேஷ், ரமேஷ், இளைஞர் நற்பணி மன்றத்தினர் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

