/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
சட்டசபை தொகுதி வாரியாக தலா ஒரு மாடல், மகளிர் ஓட்டுச்சாவடிகள்
/
சட்டசபை தொகுதி வாரியாக தலா ஒரு மாடல், மகளிர் ஓட்டுச்சாவடிகள்
சட்டசபை தொகுதி வாரியாக தலா ஒரு மாடல், மகளிர் ஓட்டுச்சாவடிகள்
சட்டசபை தொகுதி வாரியாக தலா ஒரு மாடல், மகளிர் ஓட்டுச்சாவடிகள்
ADDED : ஏப் 19, 2024 06:06 AM

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்தில் லோக்சபா தேர்தலை தொடர்ந்து சட்டசபை தொகுதி வாரியாக தலா ஒரு மகளிர் ஓட்டுச்சாவடி, மாடல் ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டுள்ளது.
லோக்சபா தேர்தல் ஓட்டுப்பதிவு இன்று நடக்கிறது. இதற்காகவும், வாக்காளர்களை கவர்வதற்காகவும் பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி மாவட்டத்தில் உள்ள 7 சட்டசபை தொகுதிக்கும் தலா ஒரு மாதிரி ஓட்டுச்சாவடி, மகளிரால் வழிநடத்தப்படும் 'பிங்க்' ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டுள்ளன.
மாடல் ஓட்டுச்சாவடிகளில் வாக்காளர்கள் அமர்வதற்கு இருக்கை , சாமியானா பந்தல், ஏர்கூலர், கம்பள விரிப்பு, பூ அலங்காரம், தோரணங்கள், பலுான் கட்டப்பட்டு அலங்கரிக்கப்பட்டுள்ளது. ஓட்டுச்சாவடிக்குள் போடப்படும் டெஸ்க்களில் அழகிய விரிப்புகள் போர்த்தப்பட்டு பூங்கொத்துக்கள் வைக்கப்பட்டுள்ளன.
திண்டுக்கல்லில் புறநகர் பகுதியில் உள்ள அங்குவிலாஸ் மேல்நிலைப்பள்ளி, பழநியில் சிவகிரிப்பட்டி யூனியன் ஆபீஸ், ஒட்டன்சத்திரத்தில் கே.ஆர்., அரசு மேல்நிலைப்பள்ளி, ஆத்துாரில் திரு இருதயா பிரைமரி பள்ளி, நிலக்கோட்டையில் மகாலட்சுமி பெண்கள் மேல்நிலைப்பள்ளி, நத்தத்தில் லேடீஸ் மெட்ரிக்குலேஷன் பள்ளி, வேடசந்துாரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி ஆகிய ஓட்டுச்சாவடிகள் மாடல் ஓட்டுச்சாவடிகளாக அமைக்கப்பட்டுள்ளன.
மகளிர் ஓட்டுச்சாவடி
மகளிர் ஓட்டுச்சாவடிகளில் தலைமை அலுவலர், நிலை அலுவலர் - 1, நிலை அலுவலர் - 2, நிலை அலுவலர் 3 உட்பட இதன் பணிகளில் பெண்கள் மட்டுமே நியமிக்கப்படுவர். வேட்பாளர் சார்பில் பெண் முகவர்கள், பாதுகாப்பு பணியில் பெண் போலீசார் ஈடுபடுவர். 'பிங்க்' நிற பலுான் வளைவுகளும் அமைக்கப்பட்டுள்ளது.
அதன்படி திண்டுக்கல்லில் ஜான்பால் மேல்நிலைப்பள்ளி, பழநியில் நகராட்சி பாரதி பிரைமரி பள்ளி, ஒட்டன்சத்திரத்தில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஆத்துாரில் தேவாங்கர் பெண்கள் உயர்நிலைப் பள்ளி, நிலக்கோட்டையில் ஆர்.சி., மேல்நிலைப் பள்ளி, நத்தத்தில் ஆர்.சி., மெட்ரிக்குலேசன் பள்ளி, வேடசந்துாரில் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி ஓட்டுச்சாவடிகள் மகளிர் சாவடிகளாக அமைக்கப்பட்டுள்ளன.

