/
உள்ளூர் செய்திகள்
/
திண்டுக்கல்
/
' கொடை' யில் இயந்திர பயன்பாடு தாராளம் ஆழ்ந்த துாக்கத்தில் அதிகாரிகள்
/
' கொடை' யில் இயந்திர பயன்பாடு தாராளம் ஆழ்ந்த துாக்கத்தில் அதிகாரிகள்
' கொடை' யில் இயந்திர பயன்பாடு தாராளம் ஆழ்ந்த துாக்கத்தில் அதிகாரிகள்
' கொடை' யில் இயந்திர பயன்பாடு தாராளம் ஆழ்ந்த துாக்கத்தில் அதிகாரிகள்
ADDED : ஏப் 16, 2024 06:54 AM

கொடைக்கானல்: கொடைக்கானலில் போர்வெல் உள்ளிட்ட இயந்திரப் பயன்பாட்டை தடுக்க அதிகாரிகள் முன்வராமல் வேடிக்கை பார்க்கின்றனர்.
கொடைக்கானல் சுற்றுலாத்தலமாக உள்ள நிலையில் செல்வந்தர்கள் இங்கு இடம் வாங்குவதை கவுரவமாக நினைக்கின்றனர். தொடர்ந்து வெளியூரில் இருந்து ஏராளமானோர் இங்கு முகாமிடும் நிலையில் தங்கள் வசதிக்கு ஏற்றவாறு மறுசீரமைப்பு செய்கின்றனர்.
நவீன கட்டுமானம், குடிநீர் தேவைக்கு இயந்திரம் பயன்பாடு அவசியம் என்ற நிலையில் நாள்தோறும் அனுமதியின்றி இயந்திர பயன்பாடு நடந்து வருகிறது.
தடை செய்யப்பட்ட இயந்திரங்கள் தாராளமாக பயன்படுத்தும் நிலையில் சம்பந்தபட்டோர் இயந்திர பயன்பாட்டிற்கு கூடுதல் தொகை செலுத்த வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாக்கப்படுகின்றனர். சில ஆண்டுகளுக்கு முன் கொடைக்கானல் மலைப்பகுதியில் நிலச்சரிவு அபாயம் உள்ள காரணத்தை சுட்டிக்காட்டி அப்போதைய கலெக்டர் வள்ளலார் இதுபோன்ற பயன்பாடுகளை முற்றிலும் தடை செய்தார். தற்போது வரை இவை நடைமுறையில் உள்ளன.
இதை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட அதிகாரிகள் இயந்திரப் பண்பாட்டை கவனிப்பு பெற்று அனுமதிக்கின்றனர். பெயரளவிற்கு நடவடிக்கை என்ற பெயரில் கண் துடைப்பு மட்டுமே செய்யும் நிலை உள்ளது. மேலும் கனிமவளத்துறையினர் இங்கு நடக்கும் தடைசெய்த பணிகளை கண்டு கொள்ளாது ஆழ்ந்த துாக்கத்தில் உள்ளனர். தரைப்பகுதியில் உள்ள போலீஸ் ,வனத்துறை சோதனை சாவடிகளை தாண்டி போர்வெல் , மண்அள்ளும் இயந்திரம் உள்ளிட்ட இயந்திரங்கள் வருகின்றன.
இருந்த போதும் இதன் மீது வனத்துறை , வருவாய்துறை, போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்காது மவுனம் காக்கின்றனர்.
கொடைக்கானலில் நள்ளிரவில் போர்வெல் அமைக்கும் பணி ஜோராக நடந்து வருகின்றது. இதில் வளம் காணும் அதிகாரிகள் இவ்வகை பயன்பாட்டை தடுக்க எவ்வித நடவடிக்கை எடுக்காது அமைதி காக்கின்றனர்.
இதன் மீது மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுத்ததாக தெரியவில்லை. தொடரும் இதுபோன்ற நிலையால் நிலச்சரிவு பேராபத்தை கொடைக்கானல் சந்திக்கும் நிலை ஏற்படும் என்பதே இயற்கை ஆர்வலர்களின் கவலையாக உள்ளது. இனியாவது அதிகாரிகள் இதில் கடுமை காட்ட வேண்டும்.

